நெகிழ்ச்சி! காதலர் தினத்தில் இறப்பிலும் பிரியாத ஜோடி!!
நெகிழ்ச்சி! காதலர் தினத்தில் இறப்பிலும் பிரியாத ஜோடி!!
திருவாரூர் அருகே கணவர் இறந்த துக்கம் தாங்காமல் மனைவியும் உயிரிழந்தார்.
பள்ளிவாரமங்கலம் கிராமத்தை சேர்ந்த பக்கிரிசாமி (76) - சந்திரா(68) தம்பதிக்கு ஒரு மகன் உள்ளார். அவர் வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார். கடந்த சில மாதங்களாக பக்கிரிசாமி உடல்நிலை பாதிக்கப்பட்டு இருந்து வந்தார்.
இந்நிலையில் கடந்த 12ஆம் தேதி பக்கிரிசாமி உயிரிழந்தார். கணவரின் இறப்பை சந்திராவால் தாங்கிக்கொள்ள முடியவில்லை. மகன் வெளிநாட்டில் வேலை பார்த்து வருவதால், அவர் வந்த உடன் இறுதி சடங்கு செய்வதற்காக உறவினர்கள் காத்திருந்தனர்.
கணவர் உயிரிழந்த துக்கம் தாங்காமல் தொடர்ந்து அழுது கொண்டிருந்த சந்திரா திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்தார். இந்த சம்பவம் அவரது உறவினர்களிடையே மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியது.
பக்கிரிசாமிக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டதில் இருந்து சந்திரா மிகவும் கவலையுடன் இருந்து வந்தார். கணவருடன் சேர்ந்து இறந்து விட்டால், அது தனது பாக்கியம் என்று அவர் கூறி வந்ததாக உறவினர்கள் கூறுகின்றனர்.
மகன் வெளிநாட்டில் இருந்து வந்ததும் பக்கிரிசாமி-சந்திராவுக்கு இறுதி சடங்குகள் செய்தார். பின்னர் இருவரின் உடலையும் ஒரே பாடையில் வைத்து எடுத்து சென்று உறவினர்கள் அடக்கம் செய்தனர்.
newstm.in