நெகிழ்ச்சி! மெழுகு சிலை தாய் மாமனின் மடியில் அமர வைத்து காதணி விழா!!
நெகிழ்ச்சி! மெழுகு சிலை தாய் மாமனின் மடியில் அமர வைத்து காதணி விழா!!
திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரத்தில் விபத்தில் உயிரிழந்த சகோதரினுக்கு மெகுழு சிலை வடிவமைத்து, மடியில் தனது குழந்தைகளை அமர வைத்து சகோதரி காதணி விழா நடத்தியது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சௌந்தர பாண்டி - பசுங்கிளி தம்பதியின் மகன் பாண்டித்துரை(21) 2 ஆண்டுகளுக்கு முன்னர் சாலை விபத்தில் உயிரிழந்துவிட்டார். பாண்டித்துரை மீது அதிக பாசம் கொண்டிருந்த அவரது மூத்த சகோதரி பிரியதர்ஷினி தனது இரண்டு குழந்தைகளுக்கு காதணி விழா நடத்த முடிவு செய்திருக்கிறார்.
குழந்தைகளுக்கு தாய்மாமன் மடியில் வைத்து காதணி விழாவை நடத்த திட்டமிட்ட பிரியதர்ஷினி, சகோதரன் பாண்டித்துரையின் மெழுகுச் சிலையை தயார் செய்தார்.
அதன்படி உயிரிழந்த பாண்டித்துரை புன்னகையுடன் இருக்கும் வகையிலான தத்ரூபமான மெழுகுசிலையை பெங்களூரு கலைஞர்களின் உதவியுடன் ரூ.5,00,000 செலவில் வடிவமைத்தார்.
சிலையை வீட்டில் வைத்து சடங்குகள் செய்து, பின்னர் குதிரைகள் பூட்டப்பட்ட வண்டியில் விழா நடக்கும் மண்டபத்திற்கு எடுத்துச்சென்றனர். அங்கு குடும்பத்தினர், உறவினர்கள் சூழ தாய்மாமன் பாண்டித்துரை மெழுகுசிலையின் மடியில் வைத்து குழந்தைகளுக்கு மொட்டையடித்து காதுகுத்தப்பட்டது.
அக்காவின் குழந்தைகளுக்கு தன் மடியில் வைத்து காதுகுத்த வேண்டும் என்கிற பாண்டித்துரையின் ஆசையை அவரது சகோதரி நிறைவேற்றியிருப்பதாக , பெற்றோர் மற்றும் குடும்பத்தினர் மகிழ்ச்சி தெரிவித்தர். இது அனைத்து தரப்பு மக்கள் மத்தியில் நெகிழ்ச்தியை ஏற்படுத்தியுள்ளது.
newstm.in