நெகிழ்ச்சி.. 3 அடி உயரம் கொண்ட இளைஞரை மணந்த பெண்..!
நெகிழ்ச்சி.. 3 அடி உயரம் கொண்ட இளைஞரை மணந்த பெண்..!
கர்நாடக மாநிலம் பாகல்கோட் மாவட்டம் பாதாமி தாலுகா நீலகுந்தா கிராமத்தை சேர்ந்தவர் பசவராஜ் (28). இவர் பீடா கடை நடத்தி வருகிறார். பசவராஜ் வெறும் 3 அடி மட்டுமே உயரம் கொண்டவர்.
இதனால், அவருக்கு பல இடத்தில் பெண் தேடியும் வரன் அமையவில்லை. இந்நிலையில், விஜயபுரா மாவட்டம் கோலாரா தாலுகா கானி கிராமத்தைச் சேர்ந்த ருக்மணி கும்பார் என்ற பெண்ணுக்கு, பல்வேறு தோஷங்கள் காரணமாக திருமணம் தடைபட்டது.
இதுபற்றி அறிந்த பசவராஜ், ருக்மணியை திருமணம் செய்ய முடிவு செய்தார். அதன் பின்னர் இரண்டு குடும்பத்தினரும் கலந்து பேசி பசவராஜ், ருக்மணி திருமணத்தை பிப்ரவரி 21-ம் தேதி நடத்துவது என்று முடிவு செய்தனர்.
அதன்படி, 2 பேரின் திருமணமும் நீலகுந்தா கிராமத்தில் வைத்து நேற்று நடந்தது. இதில், இரண்டு குடும்பத்தினர், நண்பர்கள், உறவினர்கள் கலந்து கொண்டு புதுமண தம்பதியை வாழ்த்தினர்.