நெகிழ வைக்கும் நடிகர் கார்த்தியின் செயல்!!
நெகிழ வைக்கும் நடிகர் கார்த்தியின் செயல்!!
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான கார்த்தி தனக்கென தனி ரசிகர்கள் பட்டாளத்தை கொண்டுள்ளார். இவர் தனது அண்ணனும் நடிகருமான சூர்யாவின் அகரம் ஃபவுண்டேஷனை போன்று உழவன் ஃபவுண்டேஷன் எனும் அறக்கட்டளையை நடத்தி வருகிறார்.
அதன் மூலம் விவசாயத்துக்கும் விவசாயிகளுக்கும் பல்வேறு நலன்களை செய்து வருகிறார். மேலும் தனது உழவன் ஃபவுண்டேஷன் மூலம் நன்கொடை வழங்குவது விருதுகள் வழங்குவது என பல செயல்களில் ஈடுபட்டு வருகிறார்.
இந்நிலையில், தனது ரசிகர்களுக்கு முக்கியமான அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளார். அதாவது, மலிவான விலையில் தரமான உணவுகளை விற்கும்படி அறிவுறுத்தியுள்ளார். அதன்படி கார்த்தியின் ரசிகர்கள் Karthi Fans club food centre என்ற பெயரில் தள்ளுவண்டியில் வைத்து உணவு கடையை நடத்தி வருகின்றனர்.
இது தொடர்பான புகைப்படங்கள்தான் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. மேலும் கார்த்திக்கும் அவரது ரசிகர்களுக்கும் பாராட்டை தெரிவித்து வருகின்றனர்.
newstm.in