தமிழகத்தை தொடர்ந்து புதுச்சேரியிலும் கட்டாயம்.. அதிரடி உத்தரவு !!

தமிழகத்தை தொடர்ந்து புதுச்சேரியிலும் கட்டாயம்.. அதிரடி உத்தரவு !!

Update: 2022-07-02 18:25 GMT

தமிழகத்தில் தினசரி கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரித்து மிரட்டி வருகிறது. நீண்ட நாட்களுக்கு பிறகு தினசரி பாதிப்பு  2 ஆயிரத்தை தாண்டி பதிவாகியுள்ளதால் கட்டுப்பாடுகள் விதிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. முதல் கட்டமாக மக்கள் முகக்கவசம் அணிவதை தமிழக அரசு கட்டாயமாக்கியுள்ளது. 

இந்த நிலையில், தற்போது புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் கொரோனா தொற்று மிகக் குறைவாக இருந்து வந்த சூழலில், கடந்த சில நாட்களாக நாள்தோறும் 100க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு வந்தனர். கடந்த 24 மணி நேரத்தில் புதுச்சேரி சார்ந்த 67 நபருக்கும், காரைக்காலில் 21 பேர், ஏனாமில் 11 பேர், மாஹேவில் 2 பேர் என மொத்தமாக 101 நபர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

தற்போது 452 நபர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுவரை ஒட்டுமொத்தமாக 1,66,726 நபர்களுக்கு தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் 1,64,312 நபர்கள் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். மேலும் சிகிச்சை பலனின்றி இதுவரை 1962 நபர்கள் உயிரிழந்துள்ளனர் என சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது. இந்த நிலையில் புதுச்சேரியிலும் மக்கள் முகக்கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. 
 
இது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் வல்லவன் பிறப்பித்த உத்தரவில், மத்திய அரசின் வழிகாட்டுதலின் படி புதுச்சேரியில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்களிலும் 100% தடுப்பூசி செலுத்தி இருக்க வேண்டும். அனைத்து கல்வி மற்றும் கல்லூரி நிறுவனங்களும் கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்ற வேண்டும். பொதுமக்கள் பொது இடங்களில் கட்டயமாக முககவசம் அணிய வேண்டும், என்று குறிப்பிட்டுள்ளார்.

newstm.in

Similar News