உதய்பூரை கொலையை தொடரந்து மகாராஷ்டிராவிலும் ஒருவர் கொலை!!
உதய்பூரை கொலையை தொடரந்து மகாராஷ்டிராவிலும் ஒருவர் கொலை!!
நுபுர் சர்மாவின் சர்ச்சை கருத்துக்கு ராஜஸ்தான் மாநிலம் உதய்பூரில் ஆதரவு தெரிவித்து கருத்துக்களை பதிவிட்ட டெய்லர் ஒருவர் கழுத்தை அறுத்து படுகொலை செய்யப்பட்டார். நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய இச்சம்பவத்தின் தாக்கம் அடங்கும் முன்பு மகாராஷ்டிராவிலும் அது போன்ற ஒரு சம்பவம் நடந்திருக்கிறது.
மகாராஷ்டிரா மாநிலம் அமராவதி பகுதியைச் சேர்ந்தவர் உமேஷ் (54). கால்நடைகளுக்கான மருந்து கடை நடத்தி வரும் இவர், வழக்கம்போல் கடையை அடைத்துவிட்டு இரவு 10 மணிக்கு இருசக்கர வாகனத்தில் தனது மனைவியுடன் வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார். மற்றொரு வாகனத்தில் அவரின் மகன் பின்தொடர்ந்து வந்து கொண்டிருந்தார்.
அப்போது அந்த வழியில் 2 இருசக்கர வாகனத்தில் மர்ம நபர்கள் உமேஷ் வாகனத்தை தடுத்து நிறுத்தினர். அதில் ஒருவன் உமேஷ் கழுத்தில் கத்தியால் வெட்டி விட்டு தப்பி சென்றுவிட்டனர். உடனடியாக உமேஷை அவரின் மனைவியும் மகனும் அருகில் இருந்த மருத்துவமனைகுக கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இதுகுறிது தகவல் அறிந்த போலீசார் வழக்குப்பதிவு செய்து கொலையாளிகள் முடாஷிர் அகமத், ஷாருக் பதான், அப்துல் தவுபிக், சோயப் கான், அதிப் ரஷித் ஆகியோரை கைது செய்தனர். மேலும் தப்பி ஓடிய ஒருவரை போலீசார் தீவரமாக தேடி வருகின்றனர்.
போலீசார் நடத்திய விசாரணையில் உமேஷ், பாஜக பிரமுகர் நுபுர் சர்மாவின் கருத்துக்கு ஆதரவாக வாட்ஸ்ஆப் குரூப்பில் கருத்து ஒன்றை பதிவிட்டுள்ளார் என்று தெரியவந்தது. அதை தவறுதலாக இஸ்லாமியர்கள் அதிகமாக இருக்கும் ஒரு குரூப்பிலும் பதிவிட்டது தெரிய வந்துள்ளது.
இதுதொடர்பாக கைது செய்யப்பட்டவர்களில் ஒருவனிடம் நடத்திய விசாரணையில் “முகமது நபியை அவமதித்தவர்கள் சாக வேண்டும்” என்று தெரிவித்ததாக போலீசார் தெரிவித்தனர். கொலைக்கு பயன்படுத்தப்பட்ட கத்தி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
இது குறித்து உமேஷ் மகன் சங்கேத் கூறும்போது, “எனது தந்தையின் ஃபேஸ்புக் பக்கத்தை ஆய்வு செய்த போது ஆட்சேபகரமான கருத்துகள் எதுவும் இருந்ததாக தெரியவில்லை” என்று தெரிவித்தார்.