இனி 10 நிமிடத்தில் உணவு டெலிவரி.. அதிரடி காட்டும் சோமாட்டோ !
இனி 10 நிமிடத்தில் உணவு டெலிவரி.. அதிரடி காட்டும் சோமாட்டோ !
நாட்டிலேயே முதன்முறையாக அதிகவேக உணவு டெலிவரி திட்டத்தை சோமாட்டோ(Zomato) நிறுவனம் அறிமுகப்படுத்த உள்ளது.
சென்னை உள்பட பிரதான நகரங்களில் ஆன்லைனில் உணவு ஆர்டர் செய்யும் பழக்கம் அதிகரித்துவிட்டது. இதற்காக உணவை டெலிவரி செய்யும் நிறுவனங்கள் இடையே கடும் போட்டி நிலவுகிறது. இந்த நிலையில், ஆர்டர் செய்தால் பத்து நிமிடத்தில் உணவை டெலிவரி செய்யும் திட்டத்தை சோமாட்டோ அறிமுகம் செய்கிறது.
இதற்கான அறிவிப்பை அந்த நிறுவனத்தின் தலைவர் திபீந்தர் கோயல் அறிவித்துள்ளார். அதன்படி இனி உணவு 10 நிமிடத்தில் வாடிக்கையாளர்களுக்கு டெலிவரி செய்யப்படும். இதுகுறித்து ட்விட்டரில் பேசியுள்ள திபிந்தர் கோயல், உணவின் தரம் 10/10, டெலிவரி பார்ட்னரின் பாதுகாப்பு 10/10 உணவு டெலிவரி நேரமும் 10 நிமிடம்’ எனக் குறிப்பிட்டுள்ளார்.
வாடிக்கையாளர்களுக்கு அனைத்து விடைகளுமே வேகமாகத் தேவைப்படுகிறது.அவர்கள் உணவுக்காக நீண்டநேரம் காத்திருக்க விரும்புவதில்லை’ என இந்தப் பத்து நிமிட டெலிவரிக்கான காரணத்தைக் குறிப்பிட்டுள்ளார்.
முன்னதாக, சோமாட்டோவின் ஆன்லைன் மளிகை விநியோக நிறுவனமான ஃக்ரோபர்ஸ் தனது நிறுவனத்துக்கு மறுபெயரிட்டுள்ளது. விரைவான வர்த்தகம் அல்லது அதிகபட்சமாக 10 நிமிடங்களில் மளிகைப் பொருட்களை வாடிக்கையாளர்களுக்குக் கொண்டு போய் சேர்ப்பதைக் குறிக்கும் வகையில் Blinkit என தனது நிறுவனத்துக்கு பெயரிட்டுள்ளது.
எங்கள் பணியை இனி Grofers ஆக செய்ய மாட்டோம் - அதை Blinkit ஆகச் செய்வோம், என்று Grofersன் இணை நிறுவனர் மற்றும் தலைவர் அல்பிந்தர் திந்த்ஸா தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார். க்ரோஃபர்ஸ் நிறுவனம் சமீபத்தில்தான் ஒரு பில்லியன் டாலர் மதிப்பீட்டுடன் யூனிகார்ன் அந்தஸ்தை அடைந்தது.
Announcement: 10 minute food delivery is coming soon on Zomato.
— Deepinder Goyal (@deepigoyal) March 21, 2022
Food quality – 10/10
Delivery partner safety – 10/10
Delivery time – 10 minutes
Here’s how Zomato Instant will achieve the impossible while ensuring delivery partner safety – https://t.co/oKs3UylPHh pic.twitter.com/JYCNFgMRQz
newstm.in