பைக் வைத்திருப்போர் கவனத்திற்கு.. சென்னை காவல்துறை புதிய உத்தரவு !!

பைக் வைத்திருப்போர் கவனத்திற்கு.. சென்னை காவல்துறை புதிய உத்தரவு !!

Update: 2022-03-22 10:45 GMT

ஓட்டுனர் உரிமம் பெறுவதற்கு 18 வயது பூர்த்தியடைந்திருக்க வேண்டும். ஆனால் அதை மீறி சிறுவர்கள் பைக், கார் ஓட்டுவது அதிகரித்து வருகிறது. ஆர்வத்தில் பைக், காரை இயக்குவதால் விபத்துகள் ஏற்பட்டு உயிரிழப்புகள் ஏற்படுகின்றன. 

பெரியவர்கள் அனுமதிப்பதாலும் அவர்கள் அசட்டையாக இருப்பதாலும்தான் சிறுவர்கள் பைக், காரை எடுத்து ஓட்டுகின்றனர். சென்னையில் இருசக்கர வாகனங்களை போன்றே கார் உள்ளிட்ட வாகனங்களின் பயன்பாடும் அதிகம் காணப்படுகிறது. அவ்வப்போது ரேசில் ஈடுபட்டு மக்களையும் அச்சுறுத்துகின்றனர். 

இந்நிலையில் சென்னையில் சிறுவர்கள் பைக், கார் ஓட்டுவதை தடுக்க சென்னை காவல்துறை தீவிர நடவடிக்கை எடுத்துள்ளது. அதாவது, 18 வயது நிரம்பாத சிறுவர்கள் பைக், கார்களை இயக்ககூடாது எனவும் மீறி ஓட்டும் சிறுவர்களின் பெற்றோர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் சென்னை பெருநகர காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

மேலும் இருசக்கர வாகனங்களை மாற்றியமைக்கும் நபர்கள் குறித்த விபரங்களை மெக்கானிக்குகள் உடனே தகவல் தெரிவிக்க வேண்டும் எனவும் சென்னை காவல்துறை தெரிவித்துள்ளது.


newstm.in

Similar News