தமிழகத்தில் முதல் முறை.. 12 பேருக்கு பிஏ வகை ஓமைக்ரான்..!
தமிழகத்தில் முதல் முறை.. 12 பேருக்கு பிஏ வகை ஓமைக்ரான்..!
தமிழக சுகாதாரத்துறைச் செயலர் ராதாகிருஷ்ணன் நேற்று (5-ம் தேதி), சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ஆய்வு மேற்கொண்டார்.
அதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், “கொரோனா தொற்று பாதிக்கப்பட்டவர்களின் 139 மாதிரிகள் வழக்கமான மரபணு பகுப்பாய்வுக்கு அனுப்பப்பட்டது.
இந்த ஆய்வில் 8 பேருக்கு பிஏ5 வகை, 4 பேருக்கு பிஏ4 வகை ஓமைக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. முதல் முறையாக தமிழகத்தில் பிஏ வகை ஓமைக்ரான் உறுதியாகி உள்ளது. இந்த வகை வைரஸால் பாதிக்கப்பட்ட 12 பேரும் குணமடைந்து விட்டனர்.
கொரோனா நோயாளிகள் 790 பேரில் 46 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களில் 16 பேர் ஆக்சிஜன் உதவியுடன் சிகிச்சையில் உள்ளனர்; 6 பேர் ஐசியூவில் உள்ளனர்” எனத் தெரிவித்தார்.