தமிழகத்தில் முதல்முறையாக... அரசு செய்த சூப்பர் சம்பவம்..!
தமிழகத்தில் முதல்முறையாக... அரசு செய்த சூப்பர் சம்பவம்..!
மனிதக் கழிவுகளை கைகளால் அகற்றும் முறையை ஒழிப்பதற்காக சென்னை ஐஐடி உருவாக்கிய ‘ஹோமோசெப்’ என்ற ரோபோ தற்போது செயல்பாட்டுக்கு வந்துள்ளதாக அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.
சென்னை ஐஐடி-யில் உள்ள சென்டர் ஃபார் நான் டிஸ்ட்ரக்டிவ் எவாலுவேஷனைச் சேர்ந்த பேராசிரியர் பிரபு ராஜகோபால் தலைமையில், சென்னை ஐஐடி இயந்திரப் பொறியியல் துறை ஆசிரியர், சென்னை ஐஐடி ஆதரவுடன் இயங்கி வரும் நிறுவனமான சொலினாஸ் இன்டெக்ரிட்டி பிரைவேட் லிமிடெட் ஆகியோரைக் கொண்ட குழுவினர் பல ஆண்டுகளாக பணியாற்றி இந்த ரோபோவை உருவாக்கி உள்ளனர்.
தூய்மைப் பணியாளர்கள், இந்தியாவில் மனிதக் கழிவுகளை கைகளால் அகற்றும் முறையை ஒழிக்க பாடுபட்டு வரும் சஃபாய் கர்மசாரி ஆந்தோலன் என்ற தன்னார்வ தொண்டு நிறுவனத்தினர் ஆகியோருடன் இக்குழுவினர் இணைந்து பணியாற்றி வந்தனர்.
இதுகுறித்து, சென்னை ஐஐடி வெளியிட்ட செய்திக் குறிப்பில், ‘தமிழகத்தின் பல்வேறு இடங்களில் மொத்தம் 10 இயந்திரங்கள் அமைக்க திட்டமிடப்பட்டு, அதற்கான இடங்களை கண்டறிவது தொடர்பாக தூய்மைப் பணியாளர்களுடன் ஆராய்ச்சியாளர்கள் ஏற்கனவே தொடர்பு கொண்டுள்ளனர்’ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.