தமிழக முதல்வரான பின் முதன் முறையாக வெளிநாடு சுற்றுப்பயணம்..!!

தமிழக முதல்வரான பின் முதன் முறையாக வெளிநாடு சுற்றுப்பயணம்..!!

Update: 2022-02-22 05:10 GMT

முதல்வர் மு.க.ஸ்டாலின் அடுத்த மாதம் துபாய் செல்கிறார். 192 நாடுகள் பங்கேற்கும் கண்காட்சியில் பங்கேற்பதற்காக  மு.க.ஸ்டாலின் துபாய் செல்ல உள்ளார்.

இந்த கண்காட்சியில் தமிழ்நாடு அரசு சார்பாக கைத்தறி, விவசாயம், தொழில் தொடங்க அழைப்பு விடுக்கப்படும் வகையில் அரங்கு அமைய உள்ளது.  தமிழ்நாடு சார்பாக அமைக்கப்பட உள்ள காட்சி அரங்கில் மு.க.ஸ்டாலின் பங்கேற்கிறார்.

தமிழ்நாடு முதல்வராக மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்ற பிறகு முதலீட்டை ஈர்க்க முதன் முறையாக வெளிநாடு சுற்றுப்பயணம் செல்ல உள்ளார்.

Similar News