முதல்வர் என்பதை மறந்து விடுகிறார்.. ஸ்டாலின் மீது அண்ணாமலை பாய்ச்சல்..!

முதல்வர் என்பதை மறந்து விடுகிறார்.. ஸ்டாலின் மீது அண்ணாமலை பாய்ச்சல்..!

Update: 2022-04-15 18:38 GMT

‘ஒரே நாடு' இதழ் சார்பில், 'மாற்றத்தை விதைத்த மகான் பண்டிட் தீனதயாள் உபாத்யாயா' நூல் வெளியீட்டு விழா, சென்னை தி.நகரில் உள்ள பாஜக தலைமையகமான கமலாலயத்தில் நடந்தது. தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை நூலை வெளியிட, மத்திய இணை அமைச்சர் முருகன் பெற்றுக் கொண்டார்.

விழாவில் மத்திய இணை அமைச்சர் முருகன் பேசுகையில், “தீனதயாள் உபாத்யாயாவின் கனவுப்படி பிரதமர் மோடி ஆட்சி செய்கிறார். அனைவருக்கும் வீடு, இலவச குடிநீர் இணைப்பு என பல திட்டங்களை செயல்படுத்தி வருகிறோம்” என்றார்.

அதன் பின்னர், தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை அளித்த பேட்டி: “சில கட்சிகள் அண்ணல் அம்பேத்கர் பெயரை வைத்து அரசியல் செய்கின்றன. பாஜக, அம்பேத்கரின் வாழ்க்கையை அனைத்து மக்களுக்கும் எடுத்துச் செல்கிறது.


சென்னையில் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவிக்க செல்லும்போது சில தலைவர்களின் தவறான வழிகாட்டுதலின்படி, அக்கட்சியின் தொண்டர்கள் பாஜகவினர் மீது தாக்குதல் நடத்தினர். வன்முறைக்கு வன்முறை தீர்வாகாது; பாஜக வன்முறையை கையில் எடுக்காது.

கவர்னர் தேநீர் விருந்துக்கு அழைப்பது மரபு. அந்த விருந்துக்கு திமுக  செல்லாததால் கவர்னருக்கு டீ செலவு மிச்சம். கவர்னர் அழைப்பிதழ் கொடுத்தபோதே ‘வர மாட்டோம்' என்று ஏன் சொல்லவில்லை..? முதல்வர் ஸ்டாலின், தமிழக மக்களுக்கான முதல்வர் என்பதை அடிக்கடி மறந்து விடுகிறார். அவர், திமுக உறுப்பினர்களுக்கு மட்டும் முதல்வர் இல்லை” என்று அவர் கூறினார்.

Similar News