முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் மனைவிக்கு கொரோனா தொற்று உறுதி..!!
முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் மனைவிக்கு கொரோனா தொற்று உறுதி..!!
தமிழ்நாட்டில் அண்மைகாலமாக கொரோனா பாதிப்பு அதிகாரித்து வருகிறது. குறிப்பாக, சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், கோவை ஆகிய மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
இந்த நிலையில், தமிழ்நாடு முழவதும் பொது இடங்களில் முகக்கவசம் அணிவது கட்டாயம் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதிமுகவில் ஒற்றைத் தலைமை விவகாரம் வெடித்துள்ள நிலையில், அது தொடர்பாக எடப்பாடி பழனிசாமி அடுத்தடுத்த ஆலோசனைகளை தனது ஆதரவாளர்களுடன் மேற்கொண்டு வருகிறார். மேலும், ஜூலை 11-ம் தேதியன்று பொதுக்குழுவை நடத்துவதற்கான ஏற்பாடுகளையும் எடப்பாடி பழனிசாமி தரப்பினர் மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த சூழலில், முன்னாள் சபாநாயகர் தனபால் மற்றும் முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூவுக்கும் கொரோனா பாதிப்பு உறுதியாகி உள்ளது. கடந்த 23-ம் தேதி நடந்த அதிமுக பொதுக்குழு கூட்டத்திலும் மற்றும் இபிஎஸ் இல்லத்தில் நடந்த ஆலோசனைகளிலும் கடம்பூர் ராஜூ பங்கேற்றிருந்தார்.
இந்நிலையில், முன்னாள் முதல்வரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமியின் மனைவி ராதாவுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து, அவர் கிரீன்வேஸ் சாலையில் உள்ள வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்டார்.
இந்நிலையில், அவருடன் தொடர்பில் இருந்தவர்களுக்கும் கொரோனா பரிசோதனை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.