முன்னாள் முதல்வர் முலாயம் சிங் யாதவின் மனைவி காலமானார்..!!

முன்னாள் முதல்வர் முலாயம் சிங் யாதவின் மனைவி காலமானார்..!!

Update: 2022-07-10 04:15 GMT

உத்திரப் பிரதேச முன்னாள் முதல்வரும் சமாஜ்வாடி கட்சியின் நிறுவனருமான முலாயம் சிங் யாதவின் மனைவி சாதனா குப்தா உடல் நலக்குறைவால் காலமானார்.

உடல்நலக் குறைவால் சாதனா குப்தா, சமீபத்தில் குருகிராமில் உள்ள மேதாந்தா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரது உடல்நிலை மோசமடைந்ததை அடுத்து, தீவிர சிகிச்சைப் பிரிவுக்கு மாற்றப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் இன்று காலமானார்.

சாதனா குப்தா, முலாயம் சிங் யாதவின் இரண்டாவது மனைவியாவார். இவரது மகன் பிரதீக் யாதவ். பாஜகவைச் சேர்ந்த அபர்ணா யாதர், இவர்களது மருமகள் ஆவார். இவரது உடலை விமானம் மூலம் லக்னோவுக்கு கொண்டு செல்வதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

“முலாயம் சிங்கின் மனைவியின் மரணம் மிகவும் வருத்தமளிக்கிறது. இந்த நேரத்தில் நான் குடும்பத்திற்காக பிரார்த்திக்கிறேன். ராமர் ஆன்மா மோட்சத்தையும், இழப்பைத் தாங்கும் வலிமையையும் குடும்பத்தினருக்கு அளிக்கட்டும்” என்று முதல்வர் யோகி ஆதித்யநாத் ட்வீட் செய்துள்ளார்.

“சமாஜ்வாதி கட்சியின் புரவலர் முலாயம் சிங்கின் மனைவியின் மறைவு சோகமான செய்தி இப்போதுதான் கிடைத்தது. இறந்தவர்களின் ஆன்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திக்கிறேன், அந்த இழப்பை தாங்கும் சக்தியை குடும்பத்தாருக்கு கடவுள் வழங்கட்டும் என்று உத்தரபிரதேச துணை முதல்வர் கேசவ் பிரசாத் மவுரியா ட்வீட் செய்துள்ளார்.

Similar News