காங்கிரஸ் முன்னாள் எம்.பி. கலாமானார்.. தலைவர்கள் இரங்கல் !!
காங்கிரஸ் முன்னாள் எம்.பி. கலாமானார்.. தலைவர்கள் இரங்கல் !!
காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் எம்பியுமான தலேகுன்னில் பஷீர் காலமானார்.
79 வயதான பஷீர் இதய நோய்க்கு சிகிச்சை பெற்று வந்தார். இதனால் அவ்வப்போது மருத்துவமனைக்கு சென்றுவந்த நிலையில், அங்கு தங்கியும் சிகிச்சை பெற்றார். எனும் சிகிச்சை பலன் அளிக்காமல் நேற்று அவர் உயிரிழந்தார்.
தலேகுன்னில் பஷீர், 1977இல் கேரள சட்டப்பேரவையில், 1984 மற்றும் 1989 இல் சிராயன்கீழு மக்களவைத் தொகுதியில் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
மூத்த காங்கிரஸ் தலைவர் தாலேகுன்னில் தீவிர எழுத்தாளர், கென்னசா மாநில பல்கலைக்கழகத்தில் தனது அரசியல் வாழ்க்கையைத் தொடங்கி, மக்களவை, மாநிலங்களவை, எம்எல்ஏ, கேரள பிரதேச காங்கிரஸ் குழுவின் செயல் தலைவராகப் பணியாற்றினார்.
தலேகுன்னில் பஷீர் மறைவுக்கு பல்வேறு தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். அவரது ஆன்மா சாந்தியடையட்டும் என்று கேரள காங்கிரஸ் டிவிட்டரில் தெரிவித்துள்ளது. மேலும் அவரது மறைவுக்கு முதலமைச்சர் பினராயி விஜயன், எதிர்க்கட்சித் தலைவர் வி.டி.சதீசன் உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
newstm.in