2 முறை திமுக மாவட்ட கவுன்சிலராக இருந்தவர் திடீரென மனைவியுடன் தூக்கிட்டு தற்கொலை..!!
2 முறை திமுக மாவட்ட கவுன்சிலராக இருந்தவர் திடீரென மனைவியுடன் தூக்கிட்டு தற்கொலை..!!
திமுகவில் மாநில பொதுக்குழு உறுப்பினர் உள்பட பல்வேறு பொறுப்புகள் வகித்து வந்தவர் கன்னியாகுமரி மாவட்டம் மெதுகும்மல் மேக்கவிளையை சேர்ந்தவர் சகாயம்.2 முறை திமுக சார்பில் மாவட்ட கவுன்சிலராகவும் பதவி வகித்தார். இவரது மகன் ஒரு ஆண்டுக்கு முன்பு பெங்களூருவில் நடந்த ஒரு சாலை விபத்தில் மரணம் அடைந்தார்.
கடந்த சில வாரங்களுக்கு முன்பு மகனின் முதலாம் ஆண்டு நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது.அதன் பின் சகாயத்தின் வீடு திறக்கப்படாமல் இருந்தது. இரவு நேரங்களில் வீட்டில் உள்ளே விளக்குகளும் எரியவில்லை. இதனால், சந்தேகம் அடைந்த அக்கம் பக்கத்தினர் சகாயத்தின் வீட்டுக்கு சென்று பார்த்தபோது வீட்டில் ஒரு அறையில் சகாயமும், அவரது மனைவி சுகந்தியும் தூக்கில் தொங்கியிருந்தனர். அவர்கள் 2 நாட்களுக்கு முன்பு தற்கொலை செய்திருக்கலாம் என கூறப்படுகிறது.
இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பின்னர் வீட்டை சோதனையிட்ட போது சாவதற்கு முன்பு அவர்கள் எழுதிய ஒரு கடிதம் சிக்கியது.
அந்த கடிதத்தில் ‘எங்கள் மரணத்திற்கு யாரும் காரணம் இல்லை. எங்கள் செல்ல மகனை இழந்த வேதனையை எங்களால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. இதனால், மகன் சென்ற இடத்திற்கே செல்கிறோம்’ என எழுதி இருவரும் கையெழுத்து போட்டுள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.