கொலை வழக்கில் முன்னாள் எம்.எல்.ஏவுக்கு ஆயுள் தண்டனை!!
கொலை வழக்கில் முன்னாள் எம்.எல்.ஏவுக்கு ஆயுள் தண்டனை!!
தாய் மற்றும் மகளை கொலை செய்த வழக்கில் ஒடிசா முன்னாள் எம்.எல்.ஏ. அனுப் சாய்க்கு ஆயுள் தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
சத்தீஸ்கர் மாநிலம் ராய்கர் மாவட்டம், ஹமிர்பூர் வனப்பகுதியில் கடந்த 2016ஆம் வருடம் கல்பனா என்ற பெண்ணும், அவரின் 13 வயது மகளும் சடலமாக மீட்கப்பட்டனர்.
இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர், கடந்த 2019 ஆம் ஆண்டு ஒடிசாவின் முன்னாள் எம்.எல்.ஏ.வும், பிஜு ஜனதா தளம் (பிஜேடி) கட்சியின் முன்னாள் தலைவருமான அனுப் சாயை அதிரடியாக கைது செய்தனர்.
அவரிடம் நடந்த விசாரணையில், எம்.எல்.ஏ அனுப் சாய், கல்பனாவுடன் கடந்த 2011 ஆம் வருடம் முதல் தகாத தொடர்பில் இருந்து வந்தது அம்பலமானது. கல்பனா ஒவ்வொரு முறை திருமணம் தொடர்பாக பேசும் போது, அனுப் அதனை தட்டிக்கழித்து வந்துள்ளார்.
கடந்த 2016 ஆம் ஆண்டு திருமணம் தொடர்பாக பிரச்னை ஏற்படவே, கல்பனா மற்றும் அவரின் மகளை ஊருக்கு அனுப்பி வைப்பதுபோல அழைத்து சென்று, அனுப் தனது கார் ஓட்டுநர் உதவியுடன் கொலை செய்துள்ளார்.
உறவினர்கள் அளித்த புகாரின் பேரில் விசாரணை நடத்தப்பட்டதில் உண்மை அம்பலமானது. அனுப் சாய் தனது அரசியல் அதிகாரத்தை பயன்படுத்தி வழக்கில் இருந்து தப்பிக்க முயற்சித்தாலும், அவருக்கு எதிரான சாட்சியங்கள் உறுதியான காரணத்தால் அவருக்கு தேர்தல் வாய்ப்பு மறுக்கப்பட்டது.
அனுப் சாய்க்கு எதிரான குற்றச்சாட்டுகள் உறுதியான நிலையில், கடந்த 2019ஆம் ஆண்டு அவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இவ்வழக்கு தொடர்பான விசாரணை முடிந்த நிலையில் அனுப் சாய்க்கு ஆயுள் தண்டனை மற்றும் ரூ.5,000 அபராதம் விதித்து நீதிபதிகள் தீர்ப்பளித்தனர்.
newstm.in