முன்னாள் அமைச்சர் ஆர்.எம். வீரப்பன் கொரோனாவால் பாதிப்பு !!

முன்னாள் அமைச்சர் ஆர்.எம். வீரப்பன் கொரோனாவால் பாதிப்பு !!

Update: 2022-07-17 11:44 GMT

மூத்த அரசியல் தலைவரும், அதிமுக முன்னாள் அமைச்சருமான ஆர்.எம்.வீரப்பனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

முன்னாள் அமைச்சர் ஆர்.எம்.வீரப்பன், எம்ஜிஆர் கழகம் என்ற கட்சியின் தலைவருமாக உள்ளார். அதிமுகவில் பொறுப்பில் இருந்த போதிலும் திமுகவினருடன் நட்பு பாராட்டி வந்தார். இந்த நிலையில் 95 வயதான இவர் சில ஆண்டுகளாக அரசியலில் இருந்து ஒதுங்கி சென்னை, தியாகராய நகரில் உள்ள இல்லத்தில் ஓய்வெடுத்து வருகிறார். 

இந்நிலையில் எம்ஜிஆர் கழக தலைவரும், முன்னாள் அமைச்சருமான ஆர்.எம்.வீரப்பனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.  அந்த வகையில் ஆர்.எம்.வீரப்பனுக்கு தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதனையடுத்து அவரை மருத்துவர்கள் கண்காணித்து வருகின்றனர். எனினும் அவரது உடல்நிலை தொடர்பான எவ்வித தகவலும் வெளியாகவில்லை.

தமிழகத்தில் பொதுமக்களும், அரசியல் தலைவர்களும் தொற்றால்  பாதிக்கப்படுவது அதிகரித்துள்ளது. தமிழகத்தில் நேற்று ஒரேநாளில்  2,340 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், இதுவரை தமிழகத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 35 லட்சத்து 15 ஆயிரத்து 461 ஆக அதிகரித்துள்ளது.   

newstm.in

Similar News