அமெரிக்க முன்னாள் அதிபருக்கு கொரோனா தொற்று உறுதி !!

அமெரிக்க முன்னாள் அதிபருக்கு கொரோனா தொற்று உறுதி !!

Update: 2022-03-14 08:26 GMT

அமெரிக்க முன்னாள் அதிபர் பராக் ஒபாமாவுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
 
உலகளவில் கொரோனாவால் கோடிக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டனர். அதாவது, 2 ஆண்டுகளுக்கும் மேலாக உலகை ஆட்டிப்படைத்து கொண்டிருக்கிறது.  குறிப்பாக கொரோனா தொற்றால்  சிகிச்சை பலனின்றி லட்சக்கணக்கான மக்கள் பலியாகியுள்ளனர். இந்தியா உள்பட பலவேறு நாடுகளில் கொரோனா பாதிப்பு என்பது இன்னும் முழுமையாக ஓய்ந்த பாடில்லை. குறிப்பாக அமெரிக்காவில் கொரோனா தொற்றால் தொடர்ந்து மக்கள் பாதிப்புக்குள்ளாகி வருகின்றனர்.
 


இந்நிலையில் அமெரிக்க முன்னாள் அதிபர் பராக் ஒபாமாவுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், கடந்த சில நாட்களாக தொண்டை வலியால் அவதிப்பட்டு வந்ததாகவும், பரிசோதனை செய்ததில் பாசிட்டிவ் என்று வந்ததாகவும் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன் தனது மனைவிக்கு நெகட்டிவ் என்று முடிவு வந்ததாகவும், தாங்கள் இருவரும் பூஸ்டர் தடுப்பூசி செலுத்தி கொண்டதாகவும் அவர் கூறியுள்ளார்.  தற்போது தான்  நலமுடன் இருப்பதாகவும், அனைவரும் தடுப்பூசி எடுத்துக்கொள்ளவும் ஒபாமா வலியுறுத்தியுள்ளார். 



newstm.in

Tags:    

Similar News