முன்னாள் அமைச்சர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை.. மருமகள் மீது வழக்கு பதிவு !!
முன்னாள் அமைச்சர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை.. மருமகள் மீது வழக்கு பதிவு !!
உத்தராகண்ட் மாநிலத்தைச் சேர்ந்தவர் ராஜேந்திர பகுகுணா (59). நெடுஞ்சாலைத்துறை தொழிலாளராகவும், தொழிற்சங்கத் தலைவராகவும் இருந்து அமைச்சர் அந்தஸ்துக்கு உயர்ந்தவர். ராஜேந்திர பகுகுணா 2004- 05 ஆம் ஆண்டில் அம்மாநிலத்தில் என்.டி. திவாரி அமைச்சரவையில் அமைச்சராக பணியாற்றியுள்ளார். தற்போது இவர் ஹால்தானி பகுதியில் மகன் அஜய் பகுகுணா, மருமகள், பேத்தி என குடும்பத்துடன் வசித்தார். மேலும் அரசியலில் பெரியளவில் ஈடுபாடு இல்லாமலும் இருந்துவந்தார்.
இந்த நிலையில், கடந்த வாரம் ராஜேந்திர பகுகுணா பேத்தியை மானபங்கம் செய்ய முயன்றதாக இவரது மருமகள் போலீசில் புகார் கொடுத்தார். இதையடுத்து போலீசார் ராஜேந்திர பகுகுணா மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்தனர். இந்த விவகாரம் உத்தராகண்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதனால் அவருக்கு அரசியலிலும் பெரும் பின்னடைவு ஏற்பட்டது. மேலும் மனஉளைச்சலில் இருந்த அவர் வீட்டின் மாடியில் உள்ள தண்ணீர் தொட்டி மீது ஏறி நின்று, தனது மார்பில் துப்பாக்கியால் சுட்டுக் கொண்டு தற்கொலை செய்துகொண்டார். தகவல் அறிந்துசென்ற போலீசார் உடலை மீட்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.
இது குறித்து, ராஜேந்திர பகுகுணாவின் மகன் அஜய் கூறும்போது, எனக்கும் என் மனைவிக்கும் இடையே ஏற்பட்ட சண்டை, காரணமாக தந்தை மீது பொய் குற்றச்சாட்டை மனைவி சுமத்திவிட்டார். பணத்தை பறிக்க அவர் மீது வீண்பழி சுமத்திவிட்டார். என்றார். இதையடுத்து மருமகள் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
newstm.in