முன்னாள் அமைச்சர் மகன் 4000 வாக்கு வித்தியாசத்தில் வெற்றி..!

முன்னாள் அமைச்சர் மகன் 4000 வாக்கு வித்தியாசத்தில் வெற்றி..!

Update: 2022-02-22 12:10 GMT

தமிழகத்தில் உள்ள 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள் மற்றும் 489 பேரூராட்சிகளுக்கு கடந்த 19-ம் தேதி ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்றது. இதில், 61 சதவீத வாக்குகள் பதிவாகி இருந்தன.

முறைகேடு புகார் காரணமாக சென்னை உள்பட 4 மாவட்டங்களில் உள்ள 7 வாக்குச்சாவடிகளில் நேற்று மறு வாக்குப்பதிவு நடந்தது.

இன்று காலை 8 மணிக்கு ஓட்டு எண்ணிக்கை தொடங்கியது. தமிழகம் முழுவதும் 279 மையங்களில் ஓட்டு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது.

இதில், சென்னை மாநகராட்சி 99-வது வார்டில் 4000 வாக்குகள் வித்தியாசத்தில் திமுக வேட்பாளர் பரிதி இளம்சுருதி வெற்றி பெற்றுள்ளார்.

முன்னாள் அமைச்சர் பரிதி இளம்வழுதியின் மகனான  இவர், தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட அதிமுக வேட்பாளரான முன்னாள் ஐ.ஏ.எஸ் அதிகாரி சிவகாமியை 4000 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்துள்ளார்.

Similar News