உங்கள் வங்கிக் கணக்கில் மோசடியா..?: அப்போ, இந்த நம்பரில் சொல்லுங்க..!
உங்கள் வங்கிக் கணக்கில் மோசடியா..?: அப்போ, இந்த நம்பரில் சொல்லுங்க..!
நீலகிரி மாவட்டம், குன்னூர் வெலிங்டன் எம்.ஆர்.சி. ராணுவ மையத்தில் ரிசர்வ் வங்கியின் விழிப்புணர்வு கூட்டம் நடந்தது.
இதில் கலந்து கொண்ட ரிசர்வ் வங்கி தீர்ப்பாயத்தின் முதன்மை பொது மேலாளர் தூலி ராய் பேசியதாவது:
“தற்போது, வங்கிக் கணக்குடன் மொபைல் போன் எண்கள் இணைக்கப்பட்டு, ‘டிஜிட்டல்’ பண பரிவர்த்தனைக்கு முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது.
வங்கிக் கணக்கில் இருந்து பணம் ஏமாற்றி எடுக்கப்பட்டால் அது குறித்து சம்பந்தப்பட்ட வங்கிக்கு தெரிவிக்க வேண்டும்.
ஐந்து நாட்களுக்கு பிறகும் தீர்வு வழங்காவிட்டால், 14448 என்ற ரிசர்வ் வங்கியின் எண்ணில் புகார் தெரிவிக்கலாம்” என்று அவர் கூறினார்.
இந்த நிகழ்ச்சியில், ரிசர்வ் வங்கி தீர்ப்பாயம் உதவி பொது மேலாளர் மைத்ரேயி உட்பட பலர் பங்கேற்றனர்.