நெஞ்சுக்கு நீதி படம் பார்ப்பவர்களுக்கு இலவச பிரியாணி - சிறப்பான மக்கள் பணி! - சீமான் ட்வீட்
நெஞ்சுக்கு நீதி படம் பார்ப்பவர்களுக்கு இலவச பிரியாணி - சிறப்பான மக்கள் பணி! - சீமான் ட்வீட்
'நெஞ்சுக்கு நீதி' திரைப்படத்துக்கு தமிழக எம்எல்ஏக்கள், எம்பிக்கள் இலவச டிக்கெட்டுக்களை வாங்கி கொடுப்பதோடு, படம் பார்ப்பவர்களுக்கு பிரியாணியும் போடுவதாக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், "மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அமைச்சர்கள், சட்டமன்ற, நாடாளுமன்ற, உறுப்பினர்கள் அனைவரும் தம்பி உதயநிதி நடித்த படத்தை முதல் காட்சி பார்த்துவிட்டுப் படம் எடுத்துப் பகிர்ந்து படத்தைப் பாராட்டி பதிவிடுகிறார்கள். டிக்கெட்களை வாங்கி இலவசமாகக் கொடுக்கிறார்கள்.. படம் பார்ப்பவர்களுக்கு பிரியாணி போடுகிறார்கள். சிறப்பான மக்கள் பணி! வாழ்க திராவிட மாடல்!" என பதிவிட்டுள்ளார்.
மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அமைச்சர் பெருமக்கள், சட்டமன்ற, நாடாளுமன்ற, மாமன்ற உறுப்பினர்கள் அனைவரும் தம்பி உதயநிதி நடித்த படத்தை முதல் காட்சி பார்த்துவிட்டுப் படம் எடுத்துப் பகிர்ந்து படத்தைப் பாராட்டி பதிவிடுகிறார்கள். டிக்கெட்களை வாங்கி இலவசமாகக் கொடுக்கிறார்கள்...
— சீமான் (@SeemanOfficial) May 23, 2022
(1/2)