கல்லூரி மாணவிகளுக்கு இலவச ஸ்கூட்டி.. அசரவைக்கும் பாஜக தேர்தல் அறிக்கை !!
கல்லூரி மாணவிகளுக்கு இலவச ஸ்கூட்டி.. அசரவைக்கும் பாஜக தேர்தல் அறிக்கை !!
மணிப்பூர் மாநிலத்தில் இரண்டு கட்டங்களாக சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதன்படி, முதல் கட்ட வாக்குப்பதிவு பிப்ரவரி 28ஆம் தேதியும், இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு மார்ச் 5ஆம் தேதியும் நடைபெற உள்ளது. இதனையொட்டி அரசியல் கட்சியினர் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
மணிப்பூரில் பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்த முறை பாஜக தனித்து போட்டியிடுகிறது. காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணியில் காங்கிரஸ்-54, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி-2 தொகுதிகளிலும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, பார்வர்டு பிளாக் கட்சி, புரட்சிகர சோஷலிஸ்ட் கட்சி, மதச்சார்பற்ற ஜனதாதளம் தலா ஓரிடத்திலும் போட்டியிடுகின்றன.
இவை தவிர, நாகா மக்கள் முன்னணி, தேசிய மக்கள் கட்சி, ஐக்கிய ஜனதாதளம், திரிணமூல் காங்கிரஸ் ஆகிய கட்சிகளும் களம் காண்கின்றன. மணிப்பூரில் களத்தில் பல கட்சிகள் இருந்தாலும் பாஜக- காங்கிரஸ் இடையே தான் பலமான போட்டி நிலவுகிறது.
இந்த நிலையில், பாஜக தனது தேர்தல் அறிக்கையை கட்சியின் தேசிய தலைவர் ஜே.பி.நட்டா வெளியிட்டார். அதில், கல்லூரிகளில் படிப்பில் சிறந்து விளங்கும் மாணவிகளுக்கு இலவசமாக ஸ்கூட்டி வழங்கப்படும். பிரதமரின் உஜ்வாலா திட்ட பயனாளிகளுக்கு 2 இலவச எல்பிஜி சிலிண்டர்கள் வழங்கப்படும். பொருளாதாரத்தில் பின்தங்கியவர்கள், பிற்படுத்தப்பட்ட பிரிவை சேர்ந்த பெண்களுக்கு கல்வி மற்றும் மேம்பாட்டுக்காக ரூ.25,00 ஊக்கத்தொகை வழங்கப்படும். 12 ஆம் வகுப்பில் சிறந்த மாணவர்களுக்கு இலவச மடிக்கணினி வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், சிறு, நடுத்தர மற்றும் நிலமற்ற விவசாயிகளின் பிள்ளைகள் தொழிற்கல்வி படிப்பதற்கு கல்வி உதவித் தொகை வழங்கப்படும். மூத்த குடிமக்களுக்கு வழங்கப்படும் பென்சன் 1000 ரூபாயாக உயர்த்தப்படும் எனவும் பல்வேறு வாக்குறுதிகளை பாஜக வெளியிட்டுள்ளது.
newstm.in