தனியார் பள்ளிகளில் இலவச கல்வி – நாளை முதல் விண்ணப்பிக்கலாம்!!

தனியார் பள்ளிகளில் இலவச கல்வி – நாளை முதல் விண்ணப்பிக்கலாம்!!

Update: 2022-04-19 09:15 GMT

அனைவருக்கும் கல்வி திட்டத்தின் கீழ் தனியார் பள்ளிகளில் மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பம் நாளை முதல் மே 18ஆம் தேதி வரை பெறப்படவுள்ளது.

நாடு முழுவதும் உள்ள 6 முதல் 14 வயதிலான குழந்தைகளின் கல்வியை அடிப்படை உரிமையாக மாற்றும் விதமாக 2009ஆம் ஆண்டு மத்திய அரசு அனைவருக்கும் கல்வி உரிமை என்ற சட்டத்தை இயற்றியது.

இந்த சட்டத்தின் கீழ் தமிழ்நாட்டில் உள்ள தனியார் பள்ளிகளில் 25 சதவீத இட ஒதுக்கீட்டில் மாணவர்களை சேர்ப்பதற்கு நாளை முதல் மே 18ஆம் தேதி வரை இணையதளம் www.rte.tn schools gov.in மூலம் விண்ணப்பிக்கலாம்.

இது தொடர்பாக மெட்ரிக்குலேஷன் பள்ளிகள் இயக்குனர் வெளியிட்டுள்ள அறிக்கையில், விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும் என்றால் அதற்கான காரணங்கள் இணையதளத்திலும், சம்பந்தப்பட்ட பள்ளி தகவல் பலகையிலும் முறையாக பதிவிட வேண்டும்.

நிர்ணயிக்கப்பட்ட இடங்களைக் காட்டிலும் கூடுதலாக விண்ணப்பங்கள் பெறப்பட்டு இருப்பின் மே 23ஆம் தேதியன்று குலுக்கல் நடத்தப்பட்டு மாணவர்கள் தேர்வு செய்யப்பட வேண்டும்.

அவ்வாறு தேர்வு செய்யப்படும் குழந்தைகளின் பெயர் பட்டியல் மே 24ஆம் தேதியன்று வெளியிடப்பட வேண்டும். தேர்வு செய்யப்பட்ட மாணவர்களை மே 29ஆம் தேதிக்குள் பள்ளிகளில் சேர்த்திருக்க வேண்டும் என அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

newstm.in

Similar News