மிக குறுகிய காலத்தில் விவசாயிகளுக்கு இலவச மின்சாரம்.. முதல்வர் ஸ்டாலின் பேச்சு..!

மிக குறுகிய காலத்தில் விவசாயிகளுக்கு இலவச மின்சாரம்.. முதல்வர் ஸ்டாலின் பேச்சு..!

Update: 2022-07-02 13:03 GMT

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் மாவட்ட வாரியாக சுற்றுப்பயணம் மேற்கொண்டு நலத்திட்ட உதவிகளை வழங்கி வருகிறார். அந்த வகையில், முதல்வராக பதவியேற்ற பின் அவர் முதல் முறையாக கரூர் மாவட்டத்திற்கு நேற்று வருகை புரிந்துள்ளார்.

இந்நிலையில், இன்று (சனிக்கிழமை) காலை கரூரில் நலத்திட்ட பணிகளை தொடங்கி வைக்கும் விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசினார்.

அப்போது அவர், “கடல் இல்லாத கரூருக்கு கடல் போல் மக்கள் இங்கு வந்திருக்கின்றனர். பேசாமல் உங்களைப் பார்த்துக் கொண்டே இருக்கலாம் போல் இருக்கிறது.

எப்போதும், எதையும் பிரமாண்டமாக நடத்துபவர் அமைச்சர் செந்தில் பாலாஜி. மிகக் குறுகிய காலத்தில் விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் வழங்கப்பட்டுள்ளது” என தெரிவித்தார்.

Similar News