பக்கத்து வீட்டாருடன் உல்லாசம்.. பெண்ணை அடித்தே கொலை செய்த கணவன், மகன்கள் !!

பக்கத்து வீட்டாருடன் உல்லாசம்.. பெண்ணை அடித்தே கொலை செய்த கணவன், மகன்கள் !!

Update: 2022-06-09 07:31 GMT

குடும்பத்தை பிரிந்து வேறு நபருடன் வசித்து வந்த பெண்ணை கணவன் மற்றும் மகன்கள் இணைந்து கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உத்தரபிரதேச மாநிலம் ஷாஜங்க்பூர் மாவட்டம் தாஹர்பூர் கிராமத்தில் ஓம்பால் குஷ்வாலா - மம்தா (40) தம்பதி வசித்து வந்தனர். இந்த தம்பதிக்கு 3 மகன்கள் உள்ளனர். கணவன் - மனைவி இடையே அவ்வப்போது தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இதற்கிடையில், கடந்த 2 ஆண்டுகளுக்கு முன் ஏற்பட்ட குடும்ப பிரச்சனை காரணமாக ஓம்பாலை விட்டு மம்தா பிரிந்து தனியாக சென்றுவிட்டார்.

கணவரை பிரிந்துசென்ற அவருக்கு அதேகிராமத்தை சேர்ந்த ராமன்பால் என்ற நபருடன் தொடர்பு ஏற்பட்டது. ஒருகட்டத்துக்கு பிறகு இருவரும் சேர்ந்து வாழ்ந்து வந்துள்ளார். இது மம்தாவின் கணவர், மகன்களுக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தியது. மம்தா சந்தித்து ராமன்பால் உடனான தொடர்பை கைவிடும்படி கணவர், மகன்கள் எச்சரித்தனர்.

எனினும் குடும்பத்தை விட்டு பிரிந்து அந்நபருடன் மம்தா வாழ்ந்து வந்ததால், மம்தா மற்றும் அவருடன் வாழ்ந்து வந்த ராமன்பாலை கொலைசெய்ய ஓம்பால் குஷ்வாலா அவரது மகன்கள் திட்டமிட்டனர். அதன்படி, மம்தாவையும் அவருடன் வசித்து வந்த ராமன்பாலையும் பெண்ணின் கணவர் ஓம்பால், அவரது மகன்கள் இணைந்து நேற்று கட்டையால் அடித்து கொலை செய்தனர்.

மமதாவையும், ராமன்பாலையும் கொலை செய்த பின்னர் 3 பேரும் அங்கிருந்து தப்பிச்சென்றனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் உயிரிழந்தவர்களின் உடலை கைப்பற்றி பிரேதபரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும், தப்பியோடிய 4 பேரையும் தீவிரமாக தேடி வருகின்றனர்.
 
newstm.in

Tags:    

Similar News