இனிமேல் டி20 போட்டிகளில்.. பிரபல வீரர் சொன்ன முக்கிய தகவல்..!
இனிமேல் டி20 போட்டிகளில்.. பிரபல வீரர் சொன்ன முக்கிய தகவல்..!
“இனிமேல் டி20 போட்டிகளில் ‘மெதுவாக விளையாடும் வீரர்’ என்ற பெயரை இல்லாமல் ஆக்குவேன்” என ஆஸ்திரேலியாவின் நட்சத்திர வீரர் ஸ்டீவ் ஸ்மித் தெரிவித்துள்ளார்.
கொழும்புவில் இன்று (7-ம் தேதி) இரவு, ஆஸ்திரேலியா - இலங்கை அணிகள் முதல் டி20 ஆட்டத்தில் விளையாட உள்ளன.
இந்நிலையில், “உண்மையில் நான் ‘மிஸ்டர் பிக்ஸிட்’ என்ற பட்டத்தை அழிக்க விரும்புகிறேன். பயிற்சியாளர் திவா ஒரு நாள் என்னிடம் கூறினார்.
‘நாம் அந்த பட்டத்தை அழிக்க வேண்டும். நீ இயல்பாக விளையாட வேண்டும். உனக்கு முதல் பந்திலோ, இரண்டாவது பந்திலோ சிக்ஸர் அடிக்க தோன்றினால் கூட அடித்து விடு’ என்றார். எனக்கு அது பிடித்து இருந்தது.
இனிமேல் இயல்பாக விளையாடுவேன். என் உள்ளுணர்வை நம்புகிறேன். எல்லா போட்டிகளிலும் என்னால் நீண்ட நேரம் விளையாட முடியும். இனிமேல் மெதுவாக விளையாடி அவுட் ஆக மாட்டேன். அந்த பட்டத்தை அழிக்க விரும்புகிறேன்.
நான் விளையாடும் அந்த இடம் என்னை இயல்பாக விளையாட அனுமதிப்பது இல்லை. மேக்ஸ்வெல், ஸ்டாய்னிஸ் போன்ற வீரர்கள் இருக்கும்போது எனக்கு தானாகவே அழுத்தம் வந்து விடுகிறது. நான் பொதுவாக அப்படி விளையாட மாட்டேன்.
நான் நன்றாக விளையாடும்போது பொதுவாக கேப்பில் அடிக்க முயல்வேன். அதிகமாக பந்தை இழுத்து அடிக்க விரும்பமாட்டேன். அவுட் ஆகி விடுவோனோ, அல்லது என்னால் அணி தோல்வியடைந்து விடுமோ என அதிகமாக யோசிக்க மாட்டேன்.
தலையில் அடிபட்ட போது எனக்கு கண்களை சரி செய்யவே முடியவில்லை. அணியினர் என்னை சூழ்ந்து கொண்டனர். சில நாட்கள் வெர்டிகோவால் பாதிக்கப்பட்டேன். இனிமேல் தலையில் அடி வாங்க மாட்டேன்” என ஸ்டீவ் ஸ்மித் கூறினார்.