ஜி.கே.வாசனுக்கு கொரோனா தொற்று உறுதி!!

ஜி.கே.வாசனுக்கு கொரோனா தொற்று உறுதி!!

Update: 2022-02-02 08:57 GMT

தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் எனக்கு கொரோனோ நோய்த்தொற்று அறிகுறி இருப்பது கண்டறியப்பட்டுள்ளதால் நான் என்னை தனிமைப்படுத்திக் கொண்டுள்ளேன்

எனக்கு உடல்நிலை சரியில்லாத காரணத்தால் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனைக்குச் சென்று மருத்துவ பரிசோதனை செய்து கொண்டேன். பரிசோதனையின் முடிவில் எனக்கு கொரோனோ நோய்த்தொற்று இருப்பது தெரியவந்தது.

எனவே மருத்துவரின் ஆலோசனைப்படி நோய்த்தொற்றில் இருந்து குணமாகும் வரை நான் என்னை தனிமைப்படுத்திக் கொள்கிறேன் என தெரிவித்துள்ளார்.

newstm.in

Similar News