விளையாட்டு வினையானது.. தாயை பயமுறுத்த நினைத்த மகன் உயிரிழப்பு !!

விளையாட்டு வினையானது.. தாயை பயமுறுத்த நினைத்த மகன் உயிரிழப்பு !!

Update: 2022-06-20 09:18 GMT

மதுரை மாவட்டம் பரவை பகுதியைச் சேர்ந்தவர் சரவண விஷால் (23). இவர், கல்லூரி படிப்பை முடித்து விட்டு தற்போது தனது பொற்றோருடன் வீட்டில் வசித்து வந்துள்ளார். எப்போதும் பெற்றோருடன் விளையாடி வரும் சரவண விஷால், அதேபோன்று நினைத்து செய்தது விளையாட்டு வினையானது.

அதாவது, வீட்டில் தனது தாயை பயமுறுத்த நினைத்த சரவண விஷால் பிளேடால் கழுத்தை அறுத்துக் கொள்வதாகக்கூறியுள்ளார். அவரது தாயுடன் வாக்குவாதம் செய்துள்ளார். அதாவது இவை அனைத்தையும் விஷால் விளையாட்டாக செய்துள்ளார். ஆனால், குளியலறைக்குள் சென்ற சரவண விஷால் பிளேடால் தன்னைத்தானே கழுத்தை அறுத்துக் கொண்டதாக கூறப்படுகிறது.

இதில் சம்பவ இடத்திலேயே மயங்கி விழுந்த சரவண விஷால் பரிதாபமாக உயிரிழந்தார். இதனை அறிந்த பெற்றோர், அக்கம்பக்கத்தினர் உடனடியாக சமயநல்லூர் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த சமயநல்லூர் போலீசார், சரவண விஷாலின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு உடலை அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டனர்

முதற்கட்ட விசாரணையில் உயிரிழந்த சரவண விஷால் கடந்த ஒரு ஆண்டாக மனநிலை பாதிக்கப்பட்டு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுள்ளார். தற்போது வீடு திரும்பிய சில நாட்களிலேயே தனது தாயை பயமுறுத்துவதாக நினைத்து நிஜமாக பிளேடால் கழுத்தை அறுத்துக் கொண்டது விசாரணையில் தெரியவந்துள்ளதாக போலீசார் கூறுகின்றனர். 

newstm.in

Similar News