பெட்ரோலை தொடர்ந்து கியாஸ் சிலிண்டர் விலை உயர்வு- 5 மாநில தேர்தலுக்கு பின் வேலையை கட்டியாச்சு !!
பெட்ரோலை தொடர்ந்து கியாஸ் சிலிண்டர் விலை உயர்வு- 5 மாநில தேர்தலுக்கு பின் வேலையை கட்டியாச்சு !!
வீட்டு உபயோக பயன்பாட்டிற்கான சமையல் எரிவாயு சிலிண்டர்(கியாஸ் சிலிண்டர்) விலை கடுமையாக உயர்ந்துள்ளது. சமையல் எரிவாயு சிலிண்டர் விலை மேலும் ரூ.50 அதிகரித்து ரூ.967-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை தொடர்ந்து உயர்ந்து வருவதால் இந்தியாவிலும் பெட்ரோல் டீசல் விலை உயரும் என்றும் 5 மாநில தேர்தலுக்கு பின் இந்த உயர்வு இருக்கலாம் என்றும் பேசப்பட்டது. அதேபோல சமையல் எரிவாயு சிலிண்டர் விலையும் அதிகரிக்கும் என்று சொல்லப்பட்டது.
அந்த வகையில், தமிழ்நாட்டில் 137 நாள்களுக்கு பிறகு பெட்ரோல், டீசல் விலை அதிகரித்துள்ளது. சென்னையில் பெட்ரோல் விலை லிட்டருக்கு 76 காசுகள் உயர்ந்து ஒருலிட்டர் பெட்ரோல் விலை ரூ.102.16-க்கு விற்பனை செய்யப்படுகிறது. டீசல் விலை 77 காசுகள் உயர்ந்து ரூ.92.19-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
கடந்த ஒரு மாதமாக சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் தொடர்ந்து உயர்ந்த போதிலும், பெட்ரோல், டீசல் விலையில் மற்றம் செய்யப்படவில்லை. இந்நிலையில் 137 நாட்களுக்கு பிறகு பெட்ரோல் மற்றும் டீசல், சமையல் எரிவாயு சிலிண்டர் விலை உயர்ந்துள்ளது
அதனைத்தொடர்ந்து அடுத்த இடியாக மக்களுக்கு அமைந்துள்ளது சமையல் எரிவாயு சிலிண்டர் விலை உயர்வு. 5 மாதங்களுக்கு பிறகு சமையல் எரிவாயு சிலிண்டர் விலை 50 ரூபாய் உயர்ந்துள்ளது. அதன்படி, வீட்டு உபயோக சமையல் எரிவாயு சிலிண்டர் விலை 967.50 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதனால் பொதுமக்கள் கவலை அடைந்துள்ளளனர்.
newstm.in