இரண்டு மடங்கு உயரும் கேஸ் சிலிண்டர் விலை!!

இரண்டு மடங்கு உயரும் கேஸ் சிலிண்டர் விலை!!

Update: 2022-02-23 08:15 GMT

சர்வதேச இயற்கை எரிவாயு தட்டுப்பாட்டால் கேஸ் விலை இருமடங்காக உயரும் என அஞ்சப்படுகிறது.

வீடுகளில் சமையலுக்கு பயன்படுத்தப்படும் இயற்கை எரிவாயுவிற்கான டிமாண்ட் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதே நேரத்தில் எரிவாயு உற்பத்தி தொடர்ந்து சரிந்துகொண்டே வருகிறது.

இதனால் சர்வதேச அளவில் எரிவாயுவிற்கு கடும் தட்டுப்பாடு உருவாகியுள்ளது. எரிவாயு பற்றாக்குறையின் தாக்கம் ஏற்கெனவே சர்வதேச நாடுகளில் எதிரொலிக்கத் தொடங்கியுள்ளது. இந்தியாவிலும் பல்வேறு நிறுவனங்கள் எரிவாயு கொள்முதலை குறைத்துள்ளன.

தற்போதைய சூழலில் நிலைமை கட்டுக்குள் இருந்தாலும், ஏப்ரல் மாதம் எரிவாயு பற்றாக்குறையின் சுயரூபம் தெரியவரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இயற்கை எரிவாயு விலையை ஏப்ரல் மாதம் மத்திய அரசு திருத்தவுள்ளது.

அப்போது சர்வதேச நிலவரத்துக்கு ஏற்ப விலை திருத்தம் செய்யப்படும் என கூறுகின்றனர். இதன்படி, ஏப்ரல் மாதம் எரிவாயும் விலை இருமடங்குக்கு மேல் உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல், அக்டோபர் மாதங்களில் இயற்கை எரிவாயு விலையை மத்திய அரசு திருத்துகிறது. சர்வதேச சந்தையில் இயற்கை எரிவாயு விலை ஒவ்வொரு டாலர் உயர்வுக்கும் இந்தியாவில் 4.5 ரூபாய் உயரும் என்பது குறிப்பிடத்தக்கது.

newstm.in

Similar News