இந்தியாவில் எக்குத்தப்பாக உயர்ந்துள்ள பெட்ரோல் விலை!!
இந்தியாவில் எக்குத்தப்பாக உயர்ந்துள்ள பெட்ரோல் விலை!!
நாட்டில் பெட்ரோல், டீசல் விலை உயர்வை நினைத்தால் மயக்கமே வந்துவிடும். அந்த அளவுக்கு தினமும் பெட்ரோல், டீசல் விலையை உயர்த்தி மத்திய அரசு மக்களை வாட்டி வதைத்து வருகிறது.
சில ஆண்டுகளுக்கு முன்னர் மாதத்துக்கு ஒரு முறை அல்லது இரண்டு முறை மட்டுமே பெட்ரோல் - டீசல் விலையில் மாற்றம் செய்யப்பட்டது. ஆனால் தினசரி விலை நிர்ணய முறை அமலுக்கு வந்த பிறகு ஒவ்வொரு நாளும் பொதுமக்கள் வேதனையைச் சந்திக்கின்றனர்.
பெட்ரோல் விற்கும் விலைக்கு வண்டியை விற்றுவிட்டு பேருந்திலேயே சென்றுவிடலாம் என்ற முடிவுக்கு நிறையப் பேர் வந்துவிட்டனர். அந்த அளவுக்கு பெட்ரோல் விலை விண்ணை முட்டும் அளவுக்கு உயர்ந்து நிற்கிறது.
ஒரு காலத்தில் 20, 30 ரூபாய்க்கு பெட்ரோல் விற்பனை செய்யப்பட்டதே அதிக விலை என்று நினைத்தனர். ஆனால், இப்போது 200 ரூபாய் நெருங்கும் அளவுக்கு பெட்ரோல் வந்துவிட்டது.
கடந்த 20 ஆண்டுகளில் பெட்ரோல் விலையை பார்த்தோமானால், 2003 ஏப்ரல் மாதம் வெறும் ரூ.33.49க்கு விற்கப்பட்டது. முதன்முதலில் 2011இல் தான் 50 ரூபாயை தாண்டியது. 2011 ஏப்ரல் மாதம் ரூ.58.5க்கு விற்பனை செய்யப்பட்டது.
2018 ஜூலையில் ரூ.75.55ஐ தாண்டியது ஒரு லிட்டர் பெட்ரோல் விலை. கடந்த ஜனவரி மாதம்வரை நூறு ரூபாயை தாண்டவில்லை. அதன்பிறகு ஒரு லிட்டர் பெட்ரோல் 100 ரூபாயை கடந்து தற்போது ரூ.107.45க்கு விற்பனை செய்யப்படுகிறது.
newstm.in