பாலின சமத்துவ தரவரிசை – மிக மோசமான நிலையில் இந்தியா!!

பாலின சமத்துவ தரவரிசை – மிக மோசமான நிலையில் இந்தியா!!

Update: 2022-07-14 18:50 GMT

உலக அளவில் 146 நாடுகள் கொண்ட பாலின சமத்துவ தரவரிசை பட்டியலில் இந்தியா 135வது இடத்தில் உள்ளது. இது அனைவர் மத்தியிலும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இலங்கையைவிட இந்தியா பின்னால் உள்ளது என்பது மிகவும் மோசமான நிலையாகும். 2022ஆம் ஆண்டுக்கான பாலின சமத்துவ இடைவெளி பற்றிய அறிக்கையை உலக பொருளாதார மன்றம் வெளியிட்டுள்ளது.

146 நாடுகள் கொண்ட இந்த பட்டியலில் பாலின சமத்துவம் காட்டுவதில் இந்தியா 135வது இடத்தில் உள்ளது. கடந்த ஆண்டை விட ஐந்து இடங்கள் முன்னேறிய போதிலும் இந்த பட்டியலில் இந்தியாவின் நிலை அண்டை நாடுகளைவிட மோசமாக உள்ளது.

வங்கதேசம் 71ஆவது இடத்தையும் நேபாளம் 96ஆவது இடத்தையும் பிடித்துள்ளன. இலங்கை 110ஆவது இடத்தில் உள்ளது. இந்த பட்டியலில் கடைசி இரண்டு இடங்களை பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் பிடித்துள்ளன.

உடல்நலம் மற்றும் பாதுகாப்பு பிரிவில் இந்தியா 146ஆவதாக கடைசி இடத்தில் உள்ளது. உலகின் மிகவும் பாலின சமத்துவ நாடாகத் தொடர்ந்து ஐஸ்லாந்து முதல் இடத்தில் உள்ளது. அதை தொடர்ந்து பின்லாந்து, நார்வே, நியூசிலாந்து மற்றும் ஸ்வீடன் ஆகிய நாடுகள் உள்ளன.

newstm.in

 

Similar News