10, 11, 12-ம் வகுப்பிற்கான பொதுத்தேர்வு.. தேர்வுத்துறை முக்கிய அறிவிப்பு..!
10, 11, 12-ம் வகுப்பிற்கான பொதுத்தேர்வு.. தேர்வுத்துறை முக்கிய அறிவிப்பு..!
ஏற்கனவே குறைக்கப்பட்ட பாடத் திட்டத்தின்படியே 10, 11, 12-ம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு நடைபெறும் என்று தேர்வுத்துறை தெரிவித்துள்ளது.
இதுகுறித்து தேர்வுத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘2021 - 2022-ம் கல்வியாண்டிற்கு மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்தால் வழங்கப்பட்ட குறைக்கப்பட்ட பாடத்திட்டத்தின்படியே, மேல்நிலை (முதல் மற்றும் இரண்டாம் ஆண்டு) / இடைநிலைப் பள்ளி விடுப்புச் சான்றிதழ் பொதுத்தேர்வு, மே 2022-க்கான வினாத்தாள்கள் வழங்கப்படும்.
எனவே, இத்துடன் இணைக்கப்பட்டுள்ள பாடத்திட்டத்தினை அனைத்துப் பள்ளிகளுக்கும் வழங்கி, பாடங்களை விரைந்து முடிக்க அனைத்து பள்ளித் தலைமை ஆசிரியர்களுக்கும் உரிய அறிவுரைகளை வழங்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது’ தெரிவிக்கப்பட்டுள்ளது.