வாடிக்கையாளர்களுக்கு அதிர்ச்சி கொடுத்த ஜியோ; 20% கட்டண உயர்வு..!!
வாடிக்கையாளர்களுக்கு அதிர்ச்சி கொடுத்த ஜியோ; 20% கட்டண உயர்வு..!!;
ஜியோ வாடிக்கையாளர்களுக்கு அதிர்ச்சி தரும் செய்தி வெளிவந்துள்ளது.ரிலையன்ஸ் ஜியோ ரூ.155, ரூ.185 மற்றும் ரூ.749 திட்டங்களின் விலையை உயர்த்தியுள்ளது.அதாவது, ஜியோபோன் ரீசார்ஜ் திட்டங்களின் விலையை 20 விழுக்காடு வரை அதிகரித்துள்ளது
ரூ.155 திட்டத்தின் விலை தற்போது ரூ.186 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் செல்லுபடியாகும் காலம் 28 நாட்கள். இந்தத் திட்டத்தின் கீழ் பயனர்கள் அனைத்து நெட்வொர்க்குகளுக்கும் இலவச அழைப்புகளைப் பெறுவார்கள். மேலும், ஒரு நாளைக்கு 1 ஜிபி டேட்டா மற்றும் 100 எஸ்எம்எஸ் முற்றிலும் இலவசம்.
ரூ.185க்கான இந்த திட்டத்தை ரூ.222க்கு பெறலாம். இந்த திட்டத்தின் செல்லுபடியாகும் காலம் 28 நாட்கள். இந்த திட்டத்தின் மூலம் பயனர்கள் வரம்பற்ற அழைப்பு வசதியைப் பெறுவார்கள். கூடுதலாக, நீங்கள் ஒரு நாளைக்கு 100 இலவச எஸ்எம்எஸ் மற்றும் 2 ஜிபி டேட்டாவைப் பெறுவீர்கள். அதாவது மொத்தம் 56ஜிபி டேட்டாவை இந்த திட்டத்தின் மூலம் பயன்படுத்திக்கொள்ள முடியும்.
சமீபத்தில், நிறுவனம் அதன் கவர்ச்சிகரமான ரூ.749 திட்டத்தின் விலையை உயர்த்தியது. தற்போது இந்த திட்டத்திற்கு ரூ.899 செலுத்த வேண்டும். 336 நாட்கள் நீண்ட வேலிடிட்டியுடன், இந்த திட்டம் பயனர்களுக்கு வரம்பற்ற குரல் அழைப்புகளை வழங்குகிறது. மேலும், 28 நாட்களுக்கு ஒரு நாளைக்கு 2ஜிபி டேட்டா கிடைக்கும்.