“திருமணம் செய்து வையுங்கள்” : ரோஜாவிடம் முதியவர் கோரிக்கை!!

“திருமணம் செய்து வையுங்கள்” : ரோஜாவிடம் முதியவர் கோரிக்கை!!

Update: 2022-05-20 17:26 GMT

ஆந்திர மாநிலத்தில் ஜெகன் மோகன் ரெட்டி தலைமையிலான ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் கட்சி ஆட்சி செய்து வருகிறது. சட்டமன்ற உறுப்பினர்கள் தங்களின் தொகுதிகளுக்கு நேரடியாக சென்று, மக்களின் குறைகளை கேட்டு, அவற்றை சரிசெய்யவேண்டும் என்று ஜெகன் மோகன் ரெட்டி உத்தரவிட்டிருந்தார்.

இந்நிலையில், ஆந்திர மாநிலத்தின் சுற்றுலாத்துறை அமைச்சராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட ரோஜா, தனது சட்டமன்ற தொகுதிக்குச் சென்று மக்களின் குறைகளைக் கேட்டுவந்தார். அப்போது பொதுமக்களும் தங்களின் குறைகளை கூறி, அதனை மனுவாகவும் அமைச்சரிடம் கொடுத்தனர்.

இதனிடையே அமைச்சர் ரோஜாவிடம் பேச வந்த முதியவர் ஒருவர், தனக்கு அரசின் உதவித்தொகை கிடைக்கிறது என்றும், ஆனால் வயதான காலத்தில் என்னைப் பார்த்துக்கொள்ள யாரிம் இல்லை. எனவே எனக்கு திருமணம் செய்து வைக்க வேண்டும்எனக் கேட்டார். 

அருகில் இருந்த கட்சித் தொண்டர்கள், இதனைக் கேட்டதுமே சிரித்துவிட்டனர். இந்த கேள்வியை எதிர்பார்க்காத அமைச்சர் ரோஜாவும் சிரித்துவிட்டு, அரசு உதவித்தொகை மட்டுமே கொடுக்க முடியும் என்றார். திருமணம் செய்து வைக்க முடியாது எனக் கூறினார். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் மக்கள் மத்தியில் சிரிப்பலை  எழுந்தது.

*{padding:0;margin:0;overflow:hidden}html,body{height:100%}img,span{position:absolute;width:100%;top:0;bottom:0;margin:auto}span{height:1.5em;text-align:center;font:48px/1.5 sans-serif;color:white;text-shadow:0 0 0.5em black} .youtube_play{background: red; border-radius: 50% / 16%; color: #FFFFFF; font-size: 1em; margin: 20px auto; padding: 0; position: relative; text-align: center; text-indent: 0.1em; transition: all 150ms ease-out; width: 68px; height: 45px;}.youtube_play:before{background: inherit; border-radius: 5% / 50%; bottom: 9%; content: ""; left: 0; position: absolute; right: 0; top: 9%;}.youtube_play:after{border-style: solid; border-width: 1em 0 1em 1.732em; border-color: transparent transparent transparent rgba(255, 255, 255, 0.75); content: ""; font-size: 15px; height: 0; margin: -1em 0 0 -1em; top: 50%; position: absolute; width: 0;}

" data-style="border: 0px; overflow: hidden"" title="YouTube video player" data-width="560">Full View

newstm.in

Similar News