கிப்ட் பாக்ஸ் வெடித்து புது ஜோடி படுகாயம்.. முன்னாள் காதலனிடம் விசாரணை !!

கிப்ட் பாக்ஸ் வெடித்து புது ஜோடி படுகாயம்.. முன்னாள் காதலனிடம் விசாரணை !!

Update: 2022-05-19 09:21 GMT

திருமணம் என்றாலே குடும்பத்தினர், நண்பர்கள் விதவிதமான பரிசுகளை வழங்குவது வாடிக்கையானது. குடும்பத்தினர் புதுமண தம்பதிகள் வாழ தேவையான பொருட்களை கேட்டு அல்லது பார்த்து பார்த்து யேசித்து வாங்கித்தருவார்கள். ஆனால் நண்பர்கள் அப்படியில்லை. புதுமண தம்பதிகளுக்கு எது தேவையில்லையோ அதனை தேடிபிடித்து வாங்கித்தருவார்கள். இதில் சிறந்த உதாரணம் ஆணுறை. புதுமண தம்பதிகளுக்கு எதுக்குப்பா அது..

அந்த வகையில் நண்பர்கள் அளித்த பரிசு இப்போது திருமணம் முடிந்த பிறகு பரிசுகளை பிரித்த புதுமண தம்பதிகள் தற்போது மருத்துவமனையில் சிகிச்சைக்கு படுத்துள்ளனர்.

குஜராத்தின் நவ்சாரி மாவட்டத்தில் உள்ள மின்தாபரி கிராமத்தில் லதேஷ் காவித் என்பவருக்கும், அதேபகுதியைச் சேர்ந்த பெண்ணுக்கும் திருமணம் நடைபெற்றது. தம்பதியினர் தங்கள் திருமணத்தில் தங்கள் குடும்பத்தினர், நண்பர்கள் மற்றும் உறவினர்களிடமிருந்து பரிசுகளைப் பெற்றனர். 

லதேஷ் மற்றும் மணமகளின் உறவினர் ஜியான் ஆகியோர் தங்கள் வீட்டில் மற்ற குடும்ப உறுப்பினர்கள் முன்னிலையில் பரிசுப் பொருட்களைப் பிரித்தபோது, பார்சல் ஒன்றில் ரீசார்ஜ் செய்யக்கூடிய பொம்மை இருப்பதைக் கண்டனர். இதையடுத்து லதேஷ் மற்றும் ஜியான் அந்த பொம்மையை ரீசார்ஜ் செய்ய முயன்றனர். அப்போது திடீரென அந்த பொம்மை வெடித்து சிதறியதில் இருவரும் படுகாயமடைந்தனர். 

மணமகன் லதேஷின் கைகள், தலை மற்றும் கண்களில் பலத்த காயங்கள் ஏற்பட்டுள்ளன, மேலும் அவரது வலது மணிக்கட்டு கையிலிருந்து துண்டிக்கப்பட்டது. காயமடைந்த இருவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இது தொடர்பாக பெண்ணின் குடும்ப உறுப்பினர்கள் வன்ஸ்தா காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

வெடித்து சிதறிய பரிசானது மணப்பெண்ணின் மூத்த சகோதரியின் முன்னாள் காதலனால் வழங்கப்பட்டதாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

newstm.in

Tags:    

Similar News