நகையை அடகுவைத்து ஆன்லைன் ரம்மி விளையாடிய பெண் தற்கொலை!!

நகையை அடகுவைத்து ஆன்லைன் ரம்மி விளையாடிய பெண் தற்கொலை!!

Update: 2022-06-07 07:00 GMT

சென்னையில், ரம்மி விளையாடி பணத்தை இழந்த இளம் பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மணலி புதுநகர் பகுதியைச் சேர்ந்த பாக்கியராஜ் என்பவரின் மனைவி பவானி என்பவர் கந்தன்சாவடி அருகே உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். இந்த தம்பதிக்கு 2 மகன்கள் உள்ளனர்.

இந்நிலையில், பவானி கடந்த ஒரு வருடமாக ஆன்லைன் ரம்மி விளையாடுவதில் தீவிரமாக இருந்துள்ளார். இதுகுறித்து அவரது கணவர் மற்றும் உறவினர்கள் பலமுறை எச்சரித்தும் ஆன்லைன் ரம்மியில் தீவிரமாக விளையாடி வந்துள்ளார்.

ஒரு கட்டத்தில் இவர் தனது 20 சவரன் நகை, மேலும் தனது இரண்டு சகோதரிகளிடம் தலா 1.5 லட்சம் வாங்கி அதையும் ஆன்லைனில் விளையாட்டில் இழந்துள்ளார். இதனால் மன வேதனையடைந்த பவானி தனது சகோதரிகளிடம் தெரிவித்தார்.

இந்நிலையில், குளித்துவிட்டு வருவதாகக் கூறிவிட்டு குளியலறைக்குச் சென்றவர் நீண்ட நேரமாக திரும்பி வரவில்லை. இதனால் கணவர் பாக்கியராஜ் கதவைப் பலமுறை தட்டியும் அவரிடம் இருந்து பதில் எதுவும் வரவில்லை.

இதையடுத்து கதவை உடைத்துக்கொண்டு உள்ளே சென்று பார்த்தபோது அவர் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக இருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். இது குறித்து தகவல் அறிந்து வந்த போலீஸார் உடலை மீட்டு உடற்கூறு ஆய்விற்காக அனுப்பிவைத்தனர். மேலும் சம்பவம் குறித்து போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

newstm.in

Similar News