திருமணமான ஒரு வருடத்தில் பெண் தூக்கிட்டு தற்கொலை!!
திருமணமான ஒரு வருடத்தில் பெண் தூக்கிட்டு தற்கொலை!!
சென்னையில் இளம்பெண் ஒருவர் திருமணமான ஒரே வருடத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருவேற்காடு, கனக துர்கா நகரை சேர்ந்த ஹரிபாபு (24) என்பவருக்கும் ஆந்திராவை சேர்ந்த ஜெயந்தி (20) என்ற பெண்ணுக்கும் கடந்த ஆண்டு திருமணம் நடைபெற்றது.
ஜெயந்தி தனது அறைக்குள் இருந்து நீண்ட நேரமாகியும் வெளியே வராததால் சந்தேகம் அடைந்த குடும்பத்தினர் கதவை திறந்து பார்த்தபோது, அவர் மின்விசிறியில் தூக்குபோட்டு தொங்கிய நிலையில் இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
இதைத்தொடர்ந்து, அவரை மீட்டு தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்ற போது, அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இந்த சம்பவம் குறித்து திருவேற்காடு போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த திருவேற்காடு போலீசார் ஜெயந்தி உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டனர்.
சமீப காலமாக கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அடிக்கடி குடும்பத்தில் பிரச்னை எழுந்துவந்துள்ளது. அதனால் ஜெயந்தி சில தினங்களாக மிகுந்த மன உளைச்சலில் இருந்து வந்துள்ளார்.
இந்நிலையில் கணவர் வேலைக்கு சென்றதும் வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. திருமணமாகி ஒன்றரை ஆண்டுகள் ஆவதால் ஆர்.டி.ஒ. விசாரணைக்கும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
newstm.in