காதல் திருமணம் செய்து கொண்ட 2 நாளில் பெண் உயிரிழப்பு!!

காதல் திருமணம் செய்து கொண்ட 2 நாளில் பெண் உயிரிழப்பு!!

Update: 2022-04-09 18:45 GMT

திருமணமான இரண்டே நாளில் புதுப்பெண் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

சென்னையை அடுத்த பூந்தமல்லி முத்துக்குமரன் நகரைச் சேர்ந்த அனிதா (26) என்பவர் காட்டுபாக்கத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தார். இதற்கிடையில் அனிதாவுக்கு, திருமணம் செய்து வைக்க மாப்பிள்ளை பார்த்து வந்துள்ளனர்.

இந்நிலையில் அனிதா தன்னுடன் வேலைபார்க்கும் ஆவடியை சேர்ந்த உதயா என்பவரை காதலித்து வந்துள்ளார். பின்னர் இருவரும் கடந்த புதன்கிழமை ராயபுரத்தில் பதிவு திருமணம் செய்து கொண்டனர். பின்னர் அவர் உதயா வீட்டுக்குச் சென்றார்.

இந்நிலையில் வெள்ளிக்கிழமை காலை அவர் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்போலீசார் சடலத்தை கைப்பற்றி உடற்கூறு சோதனைக்காக கீழ்ப்பாக்கம் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

புகாரின் அடிப்படையில் ஆவடி போலீஸ் உதவி ஆணையர் சத்தியமூர்த்தி தலைமையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் திருவள்ளூர் ஆர்டிஓ விசாரணை நடத்தி வருகிறார்.

விசாரணைக்குப் பிறகே அனிதா இறந்ததற்கான காரணம் தெரியவரும் என தெரிவித்துள்ளனர். திருமணமான இரண்டே நாளில் புதுப்பெண் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் ஆவடி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

newstm.in

Similar News