பன்றிக் காய்ச்சலுக்கு சிறுமி பலி.. அச்சத்தில் மக்கள் !!

பன்றிக் காய்ச்சலுக்கு சிறுமி பலி.. அச்சத்தில் மக்கள் !!

Update: 2022-06-03 07:22 GMT

பன்றிக் காய்ச்சல் பாதிப்புக்கு 12 வயது சிறுமி உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

கேரளாவில் கொரோனா தொற்று பாதிப்பு குறைந்தவந்த நிலையில் தற்போது பன்றிக் காய்ச்சல் பரவி வருவது மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியது. பன்றிக் காய்ச்சல் பரவலை கட்டுப்படுத்த மாநில அரசும் கடுமையாக போராடி வருகிறது. 

இந்த நிலையில் கோழிக்கோடு மாவட்டத்தில் உள்ள உள்ளியேரி கிராமத்தைச் சோ்ந்த இரட்டைச் சகோதரிகள் கோடை விடுமுறைக்கு அண்டை மாநிலங்களுக்குச் சுற்றுலா சென்று வந்தனா். அதன் பிறகு இருவருக்கும் உடல்நலக்குறைவு ஏற்பட்டதை அடுத்து முதலில் கொயிலாண்டி வட்டார மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா்.

எனினும் உடல்நிலை மோசமானதையடுத்து கோழிக்கோட்டில் உள்ள மகப்பேறு மற்றும் குழந்தைகள் நல மருத்துவமனையில் (ஐஎம்சிஎச்) கடந்த சில தினங்களுக்கு முன் அனுமதிக்கப்பட்டனா். அவா்களில், ஒரு சிறுமி கடந்த ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா். அவருடைய மருத்துவ பரிசோதனை முடிவுகள் வியாழக்கிழமை வந்தன. அதில், அவா் பன்றிக் காய்ச்சலுக்கு (எச்1என்1 வைரஸ்) உயிரிழந்தது உறுதிசெய்யப்பட்டது.

அவருடைய சகோதரி தொடா்ந்து சிகிச்சை பெற்று வருகிறாா். அவருடைய உடல்நிலை சீராக உள்ளது. நிலைமையை உன்னிப்பாகக் கவனித்து வருகிறோம் என்று அந்த அதிகாரி கூறினாா்.

 
 
newstm.in

Tags:    

Similar News