சிறுமி பாலியல் வன்கொடுமை.. மாமாவுக்கு ஆயுள்.. அத்தைக்கு 10 ஆண்டு சிறை..!

சிறுமி பாலியல் வன்கொடுமை.. மாமாவுக்கு ஆயுள்.. அத்தைக்கு 10 ஆண்டு சிறை..!

Update: 2022-07-02 04:35 GMT

சென்னையைச் சேர்ந்த ஆறு வயது சிறுமி ஒருவரை அவருடைய தாய் கைவிட்ட நிலையில் தந்தை, பாட்டி ஆகியோர் பராமரித்து வந்தனர்.

கடந்த 2014-ம் ஆண்டு தந்தை, பாட்டி ஆகியோர் இறந்த நிலையில், சிறுமியை அவரது அத்தை, சென்னை தி.நகரில் உள்ள தன் வீட்டுக்கு அழைத்து சென்று பராமரித்து வந்தார்.

இந்நிலையில், சிறுமியை அவரது மாமா தொடர்ந்து பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இதுகுறித்து சிறுமி தன் அத்தையிடம் தெரிவித்தும், அவர் கண்டுகொள்ளவில்லை. இருவரும் சேர்ந்து சிறுமியை தாக்கியுள்ளனர்.

இதுகுறித்து அந்த சிறுமி, அவருடைய மற்றொரு உறவினரிடம் தெரிவித்தார். அவர்கள், தேனாம்பேட்டை அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்தனர். போலீசார் வழக்குப்பதிவு செய்து, சிறுமியின் அத்தை, மாமா இருவரையும் கைது செய்தனர்.

இது தொடர்பான வழக்கு, சென்னை 'போக்சோ' நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இந்த வழக்கில் அரசு சிறப்பு வழக்கறிஞர் டி.ஜி.கவிதா ஆஜரானார்.

இவ்வழக்கை விசாரித்த நீதிபதி எம்.ராஜலட்சுமி, “சிறுமியின் அத்தை, மாமா மீதான குற்றச்சாட்டு சந்தேகத்துக்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டுள்ளது

எனவே, சிறுமியின் மாமாவுக்கு ஆயுள் தண்டனையும், ரூ.25 ஆயிரம் அபராதமும், அவரது மனைவிக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனையும், 10 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதிக்கப்படுகிறது. பாதிக்கப்பட்ட சிறுமிக்கு, தமிழக அரசு ஏழு லட்சம் ரூபாய் இழப்பீடாக வழங்க வேண்டும்” என்று தீர்ப்பளித்தார்.

Similar News