காதலனை கட்டுப்போட்டு காதலி கூட்டு பாலியல் வன்கொடுமை!!

காதலனை கட்டுப்போட்டு காதலி கூட்டு பாலியல் வன்கொடுமை!!

Update: 2022-03-26 17:48 GMT

ராமநாதபுரத்தில் காதலன் கண் முன்னே கல்லூரி மாணவியை மூன்று பேர் கொண்ட கும்பல் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையை சேர்ந்த கல்லூரி மாணவி தனது காதலன் ஹரிகிருஷ்ணனுடன் ராமநாதபுரம் மாவட்டம் மூக்கையூர் கடற்கரைக்கு சுற்றுலா சென்றிருந்தார். அப்போது, மக்கள் நடமாட்டம் இல்லாத இடத்தில் காதலர்களை 3 பேர் சுற்றிவளைத்தனர்.

அவர்கள் ஹரிகிருஷ்ணனை கட்டிப்போட்டுவிட்டு, அவரது கண்முன்னே அந்த மாணவியை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்தனர். மேலும், ஹரிகிருஷ்ணன் மற்றும் அவரது காதலியிடம் இருந்து நகை, பணத்தையும் திருடி சென்றனர்.

தனது கண்முன்னே காதலி வன்கொடுமைக்கு உள்ளானதை தாங்க முடியாத ஹரிகிருஷ்ணன் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றார். இதையடுத்து, ஹரிகிருஷ்ணன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதற்கிடையே, தனக்கு நடந்த பாலியல் வன்கொடுமை சம்பவம் குறித்து அருப்புக்கோட்டை டிஸ்பியிடம் பாதிக்கப்பட்ட பெண் புகார் அளித்தார். இதை தொடர்ந்து சிறப்பு உதவி ஆய்வாளர் நவநீதகிருஷ்ணன் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு குற்றவாளிகளை தேடும் பணிகள் தீவிரமாக நடைபெற்றது.

போலீசாரின் தீவிர தேடுதல் வேட்டையில் குற்றசம்பவத்தில் ஈடுபட்டவர்கள் கமுதி அருகே குண்டுகுளம் கிராமத்தில் பதுங்கியிருந்தது தெரியவந்தது. இதையடுத்து, அவர்களின் இருப்பிடத்தை போலீசார் சுற்றிவளைத்தனர்.

தங்களை பிடிக்க முயன்ற போலீசாரை அரிவாளால் வெட்டிவிட்டு பைக்கில் ஏறி தப்பிச்செல்ல முயன்றனர். இதில் ஆய்வாளர் நவநீதகிருஷ்ணணுக்கு கையில் காயம் ஏற்பட்டுள்ளது. எனினும், 3 பேரையும் போலீசார் தப்ப விடாமல் பிடித்து கைது செய்தனர்.

newstm.in

Similar News