பாஸ்போர்ட் இல்லை - கடலில் நீந்தியே இந்தியாவிற்கு வந்த காதலி..!!

பாஸ்போர்ட் இல்லை - கடலில் நீந்தியே இந்தியாவிற்கு வந்த காதலி..!!

Update: 2022-06-01 13:12 GMT

இந்தியாவைச் சேர்ந்த அபிக் மந்தலுக்கும் வங்கதேசத்தைச் சேர்ந்த 22 வயது இளம்பெண் கிருஷ்ணா மந்தலுக்கும் முகநூல் மூலமாக நட்பு ஏற்பட்டு பின்னர் காதலாக மாறியது. இதனைத் தொடர்ந்து இருவரும் திருமணம் செய்ய முடிவு செய்தனர். ஆனால், கிருஷ்ணா மந்தலிடம் இந்தியா வருவதற்காக பாஸ்போர்ட் இல்லை.

ஆனாலும் தனது காதலனைத் திருமணம் செய்து கொள்வதற்காக கிருஷ்ணா எடுத்த அதிரடி முடிவு அனைவரையும் தூக்கி வாரி போட்டுள்ளது. காதலனை மணப்பதற்காக சட்டவிரோதமாக எல்லை தாண்ட முடிவு செய்த அவர், முதலில் சுந்தரவனக்காட்டை வந்தடைந்துள்ளார். அங்கிருந்த நதியில் ஒரு மணிநேரம் நீந்தி தொடர்ந்து தனது இலக்கை அடைந்தார். இந்தியா வந்த அவர் மூன்று நாட்களுக்கு முன்பு கொல்கத்தாவில் உள்ள காளிகாட் கோவிலில் வைத்து தனது காதலனை நினைத்தப்படியே திருமணம் செய்து கொண்டார்.

இந்தநிலையில், சட்டவிரோதமாக எல்லையை கடந்து வந்தற்காக கிருஷ்ணா மந்தலியை போலீசார் கைது செய்தனர். 

Similar News