காதலனின் தந்தையை கொன்ற காதலியின் தந்தை!!

காதலனின் தந்தையை கொன்ற காதலியின் தந்தை!!

Update: 2022-03-05 10:16 GMT

மகள் காதல் திருமணம் செய்து கொண்டதால்  காதலனின் தந்தையை, பெண்ணின் தந்தை கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மதுரை திடீர் நகர் பகுதியை சேர்ந்த ராமச்சந்திரன்(45) என்பவரின் மகன் சிவபிரசாத் அதே பகுதியை சேர்ந்த சடையாண்டி என்பவரின் மகள் சினேகாவை காதலித்து வந்தார்.

ஆனால் இவர்களின் காதலுக்கு இருவீட்டாரும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனையடுத்து இருவரும் இரு வீட்டார் எதிர்ப்பையும் மீறி திருமணம் செய்து கொண்டனர். அதன்பிறகு திடீர் நகர் காவல் நிலையம் சென்று இருவரும் தங்களுக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டுமென கோரினர்.

போலீசார் அறிவுரை கூறி இருவரையும் அனுப்பி வைத்தனர். இந்நிலையில் பையனின் தந்தை ராமச்சந்திரனை, பெண்ணின் தந்தை  சடையாண்டி பெரியார் பேருந்து நிலையம் அருகே வெட்டியதில் சம்பவ இடத்திலேயே ராமசந்திரன் உயிரிழந்தார்.

இதனையடுத்து போலீஸார் சடையாண்டியை  கைது செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.  இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

newstm.in

Similar News