பணத்தை திருப்பி கொடுத்துடுங்க.. ஆம்னி பஸ்சில் அமைச்சர் அதிரடி..!
பணத்தை திருப்பி கொடுத்துடுங்க.. ஆம்னி பஸ்சில் அமைச்சர் அதிரடி..!
தமிழகத்தில் இன்று முதல் நான்கு நாட்கள் தொடர் விடுமுறை என்பதால், தொழில் நிமித்தமாக சென்னை உள்ளிட்ட பெரு நகரங்களில் வசிக்கும் பொதுமக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு பேருந்துகளில் பயணம் மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில், தனியார் பேருந்துகளில் பயணிகளிடம் கூடுதலாக கட்டணம் வசூலிக்கப்படுவதாக புகார் எழுந்தது. இதையடுத்து, போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் சென்னை தனியார் ஆம்னி பேருந்துகளில் நேற்று இரவு திடீரென ஆய்வு மேற்கொண்டார்.
அப்போது, பேருந்தில் இருந்த பயணிகளிடம் எவ்வளவு கட்டணம் வசூலிக்கப்பட்டது என அமைச்சர் கேட்டார். அதற்கு பயணிகள், வழக்கத்தை விட கூடுதலாக கட்டணம் வசூலிக்கப்பட்டதாக கூறினர்.
உடனே அமைச்சர், கூடுதலாக வசூலிக்கப்பட்ட கட்டணம் உங்களுக்கு திருப்பித் தரப்படும் எனக் கூறினார். தொடர்ந்து, பயணிகளிடம் கூடுதலாக வசூலிக்கப்பட்ட கட்டணத்தை திருப்பி கொடுக்கும்படி தனியார் பேருந்து உரிமையாளர்களுக்கு உத்தரவிட்டார்.
தனியார் ஆம்னி பேருந்துகளில் போக்குவரத்து துறை அமைச்சர் ஒருவர் ஆய்வு செய்வது இதுவே முதல்முறையாகும் என்பது குறிப்பிடத்தக்கது.