வெற்றியை கொடு பாண்டி முனியா.. கோயிலில் கிடா வெட்டி விஜய் மக்கள் இயக்கம் வழிபாடு..!
வெற்றியை கொடு பாண்டி முனியா.. கோயிலில் கிடா வெட்டி விஜய் மக்கள் இயக்கம் வழிபாடு..!
நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் வெற்றி பெற வேண்டி, புகழ்பெற்ற மதுரை பாண்டி கோயிலில் விஜய் மக்கள் இயக்கத்தினர் கிடா வெட்டி சிறப்பு வழிபாடு செய்தனர்.
தமிழகத்தில் உள்ள 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள் மற்றும் 490 பேரூராட்சிகள் என மொத்தம் 649 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு வரும் 19-ம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது.
இந்தத் தேர்தலில், விஜய் மக்கள் இயக்கத்தினர் களம் காண்கின்றனர். அதற்கான களப்பணிகளில் அவர்கள் தீவிரம் காட்டி வருகின்றனர்.
மதுரை மாநகராட்சிக்கு உட்பட்ட 100 வார்டுகளில் போட்டியிட திட்டமிட்டுள்ளனர். அதற்காக அவர்கள், மதுரை வடக்கு மாவட்ட விஜய் மக்கள் இயக்க தலைவர் கல்லானை தலைமையில் கூட்டம் நடத்தினர்.
இந்த நிலையில், மதுரை பாண்டி முனீஸ்வரன் கோயிலில் விஜய் மக்கள் இயக்கத்தினர் கிடா வெட்டி வழிபாடு மேற்கொண்டனர். விஜய் மக்கள் இயக்கம் சார்பில் தேர்தலை சந்திக்கும் அனைத்து வேட்பாளர்களும் வெற்றி பெற வேண்டும் என சிறப்பு பிரார்த்தனை செய்தனர்.