பள்ளியின் வகுப்பறைக்கு சென்று சிறுமி மீது கடும் தாக்குதல்.. தாய் மீது வழக்குப்பதிவு

பள்ளியின் வகுப்பறைக்கு சென்று சிறுமி மீது கடும் தாக்குதல்.. தாய் மீது வழக்குப்பதிவு

Update: 2022-03-09 16:50 GMT

அரசு பள்ளி வகுப்பறையில் ஐந்தாம் வகுப்பு படிக்கும் சிறுமியை அடித்து உதைத்த மற்றொரு சிறுமியின் தாய் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

காஞ்சிபுரம் அருகேயுள்ள வேடல் கிராமத்தில் அரசு தொடக்கப்பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் ஐந்தாம் வகுப்பு படிக்கும் 2 மாணவிகளுக்கு இடையே சிறு பிரச்சனை ஏற்பட்டுள்ளது. அப்போது ஒருவருக்கொருவரை திட்டிக்கொண்டதாகவும் கூறப்படுகிறது.

இதில், ஒரு மாணவி வீட்டிற்கு சென்று தனது தாய் மேகலாவிடம் பிரச்சனையை கூறியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த மேகலா, மாலையில் பள்ளி வகுப்பிற்கு வந்து சம்மந்தப்பட்ட சிறுமியை அடித்து உதைத்துள்ளார். இதில் அந்த சிறுமி பலத்த காயமடைந்து அலறியுள்ளார். தலைமை ஆசிரியர் எடுத்துக்கூறியும் கேட்காமல் அந்த சிறுமியை அப்பெண்மணி தாக்கியுள்ளார்.

இதில், உடல்நிலை மோசமானதால் சிறுமி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் அவரது தாய் காவல்நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில், சிறுமியை கண்மூடித்தனமாக தாக்கிய மேகலா மீது காவல்துறையினர் இரண்டு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர். மேலும் இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர்.
 

newstm.in

Similar News