திமுக ஆட்சியில் தெய்வங்களும் மகிழ்ச்சி.. பேரவையில் அமைச்சர் பேச்சு..!
திமுக ஆட்சியில் தெய்வங்களும் மகிழ்ச்சி.. பேரவையில் அமைச்சர் பேச்சு..!
தமிழக சட்டப்பேரவையில் இன்றைய கேள்வி - பதில் நேரத்தில் உறுப்பினர்களின் கேள்விகளுக்கு பதிலளித்து இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு பேசினார்.
அப்போது அவர், “12 ஆண்டுகள் கழிந்தும், ஆகம விதிப்படி குடமுழுக்கு நடத்தப்படாத கோயில்களுக்கு விரைவில் குடமுழுக்கு நடத்த, நடப்பு நிதியாண்டில் ரூ.100 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
கேட்காததையும் செய்யும் அரசாக திமுக அரசு உள்ளது. தெய்வங்களும் மகிழ்ச்சியாக இருக்கும் நல்ல சூழல், திமுக ஆட்சியில் நிலவுகிறது.
மேலும், திருநீர்மலை, திருக்கழுக்குன்றம், திருச்சி, மலைக்கோட்டை விநாயகர் கோவிலுக்கு ரோப் கார் அமைக்கும் பணி விரைவில் தொடங்கும். திருத்தணி முருகன் கோவிலில் மாற்றுப்பாதையில் ரோப்கார் அமைப்பது பற்றிய ஆய்வு மேற்கொண்டு நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
முதலமைச்சராக மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்றவுடன், மாநிலம் முழுவதும் 507 கோவில்களில் ரூ.664 கோடி மதிப்பீட்டில் 907 பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
இன்னார் இனியவர் என்று பாராமல், யார் சிபாரிசு செய்தாலும் வேறுபாடு பார்க்காமல் பணிகளை செய்து தர முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.
மேலும், பகவதி அம்மன் கோவிலில் முந்தைய ஆட்சியில் அனுமதி தரப்பட்டிருந்த எந்த பணிகளும் நிறுத்தப்படவில்லை” என்று தெரிவித்தார்.